MEDIA STATEMENT

சபா அம்னோவுக்கு நஜிப் கொடுத்த ரிம 8 மில்லியன் தொடர்பில் விசாரணை வேண்டும்

சபா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ மூசா அமான், பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் சபா அம்னோவின் நான்கு தொகுதிகளான பென்சியாங்கான், ரானாவ், கெனிங்காவ் மற்றும் தெனோம் ஆகியவற்றிற்கு ரிம 8 மில்லியன் வழங்கப்படும் என்று உறுதி படுத்திய செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இந்த அறிவிப்பு டத்தோ ஸ்ரீ மூசா அமான் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். ஆகவே, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் இதை மறுக்க முடியாது. இந்த பணம் சம்பந்தப்பட்ட தொகுதி தலைவர்களின் சிறிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் விவரிக்கும் பட்டுள்ளது.

கெஅடிலான் இளைஞர் அணியினர் மூன்று கேள்விகளை நேரிடையாக நஜிப் ரசாக் மற்றும் மூசா அமான் ஆகிய இருவரிடமும் கேட்க விரும்புகிறோம் :-

1.  நஜிப் எங்கிருந்து ரிம 8 மில்லியனை கொண்டு வந்தார்? இந்த பணம் அரபு மன்னர் நன்கொடையாக கொடுத்தாரா அல்லது 1எம்டிபி-இன் பணமா?

2. இது வரை பிரதமர் ரிம 8 மில்லியனை எங்கே சேமித்து வைத்திருந்தார்? இதற்கு வருமான வரித்துறையிடம் வரி செலுத்தி உள்ளதா?

3.  நான்கு தொகுதிகளை தவிர மற்ற எந்தந்த தொகுதிகள் நிதி உதவி பெற்றுள்ளது? வேறு எந்த கூட்டணி கட்சிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறதா?

பேங்க் நெகாரா மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உடனடியாக நஜிப் மற்றும் மூசா அமானை விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தான் கார் ஹேங்

கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் அணி உதவித் தலைவர்

சிம்பாங் பூலாய் சட்ட மன்ற உறுப்பினர்

#கேஜிஎஸ்


Pengarang :