SELANGOR

சமூக மேம்பாடு நிகழ்வுகள் மக்கள் நலனில் முதன்மைக் கொண்டுள்ளது

பத்து கேவ்ஸ், ஆகஸ்ட் 16:

சிலாங்கூர் அரசாங்கம் மேற்கொண்டு வரும் ஒவ்வொரு சமூக மேம்பாடு நிகழ்வுகளும் நடவடிக்கைகளும் மக்களின் நலனை முதன்மையாக கொண்டது என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.அவ்வகையில் பெராங்சாங் குழுமத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒவ்வொன்றும் மக்களின் நலனை இலக்காய் கொண்டதாய் இருப்பதாகவும் கூறினார்.

இம்மாதிரி சிலாங்கூர் வாழ் மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காகவும் மாநில அரசாங்கம் இதுவரை 26 மில்லியன் நிதியினை பயன்படுத்தியிருப்பதாகவும் கூறிய மந்திரி பெசார் லாபத்தை மட்டும் இலக்காக கொள்ளாமல் அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை மக்களும் அனுபவிக்கும் நிலையை உருவாக்குவதே மாநில அரசாங்கத்தின் கொள்கை என்றும் கூறினார்.

இந்நிலையில் ஆறு ஆண்டுகளில் பெராங்சாங் குழுமத்தினர் இதுவரை 26 மில்லியன் நிதியினை சமூக அக்கறையோடு மக்களின் சமூகநல மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு வருவதாகவும் அஃது சிலாங்கூர் மாநில அரசின் சமூக நல திட்டத்தின் மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்றுவதாகவும் பெருமிதமாய் குறிப்பிட்டார்.

மக்கள் சமூகநலனில் பெரும் அக்கறை கொண்ட அரசாங்கமாய் சிலாங்கூர் மாநிலம் விளங்கிடும் நிலையில் மாநில அரசு சார்ந்த ஒரு நிறுவனம் லாபத்தை மட்டுமே இலக்காக கொண்டிருந்தால் அஃது அர்த்தமற்றது என கூறிய மந்திரி பெசார் மாநில அரசாங்கம் மக்களுக்காக வரையறுத்திருக்கும் 38 நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லும் ஆக்கப்பூர்வமான பணியினையும் பெராங்சாங் மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காண்பித்தார்.

மாநில அரசாங்கத்தின் நலத்திட்டங்களை மக்களிடையே குறிப்பாக அடித்தட்டு சாமானிய மக்களிடையே கொண்டு செல்லும் பணியையும் கார்னிவேல் அல்லது மக்கள் நிகழ்வுகள் மூலம் கொண்டு செல்வதும் விவேகமானது என டத்தோஸ்ரீ அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

மாநில அரசாங்கம் எந்நிலையிலும் மக்கள் நலனையும் அவர்களிம் மேம்பாட்டையும் மறந்ததில்லை என்றார்.அன்மையில்,கம்போங் பாரு பத்துகேவ் வட்டாரத்தில் மாநில அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டம் (ஐபிஆர்) கார்னிவேல் நிகழ்வினை தொடக்கி வைக்கையில் மந்திரி பெசார் இவ்வாறு கூறினார்.

#ரௌத்திரன்


Pengarang :