NATIONAL

சிங்கப்பூரிடம் டாக்டர் சுப்பிரமணியம் கற்றுக்கொள்ள வேண்டும்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15:

தொற்றுநோய் வகையிலான நோய்கள் விவகாரத்தில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களிடம் சிங்கப்பூர் கடைப்பிடிக்கும் வரையறையினை மலேசியாவும் பின் பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்ட கெஅடிலான் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பு பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எட்மன் சந்தாரா நாட்டின் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் சிங்கப்பூரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட 1.9 மில்லியன் அந்நிய தொழிலாளர்களில் சுமார் 3 விழுகாட்டினர் மருத்துவ பரிசோதனையில் ஆரோக்கியமற்றவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதார அமைச்சரான சுப்பிரமணியம் அந்நிய தொழிலாளர் விவகாரத்தில் சிங்கப்பூரை போல் மிகவும் கண்டிப்பான போக்கினை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறிய அவர் அண்டைநாடான சிங்கப்பூரிடம் அவர் அதனை கற்றுக் கொள்வதே விவேகம் என்றார்.

நாட்டில் பல்வேறு துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க அந்நிய தொழிலாளர்களின் வருகை அவசியம் என்றாலும் கட்டுப்படுத்தப்படாத நிலையிலான அந்நிய தொழிலாளர்கள் நோய்கள் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு அடிப்படையாகவும் விளங்குவதாக சுட்டிக்காண்பித்தார்.
அந்நிய தொழிலாளர்களை தருவிக்கும் போது அவர்களின் மருத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் சிங்கப்பூர் மேற்கொள்ளும் கடுமையான  விதிமுறைகளை மலேசியாவும் பின்பற்ற வேண்டும்.அவர்களின் மருத்துவ பரிசோதனையின் போது சுகாதார அமைச்சு மெத்தனமாய் இயங்காமல் ஆக்கப்பூர்வமாய் இருத்தல் வேண்டும் என்றார்.

மலேசியா கடந்த 90-ஆம் ஆண்டுகளின் இறுதி வரை டிபி என சொல்லப்படும் காசநோய் இல்லாத நாடு எனும் இலக்கை எட்டும் நிலையை பிடித்திருந்த வேளையில் 2000ஆம் தொடக்கம் அந்நிய தொழிலாளர்களின் நுழைவு காசநோய் பிரச்சனையை நாட்டில் தலைதூக்க வைத்தது என்றும் நினைவுக்கூர்ந்தார்.
மலேசியர்களிடம் காசநோய் தொடர்பிலான விழிப்புணர்வு இல்லாததால் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களின் வருகையின் போது அந்நோய் நாட்டில் ஊடுருவ தொடங்கியது என்றார்.

தோற்றுநோய்களில் மரணத்தை விளைவிக்கும் நோய்களில் காசநோய் முதன்மையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.டிங்கி,எஸ் ஐ வி மற்றும் மலேரியா போன்ற நோய்களை காட்டிலும் மரணத்தை பல மடங்கு அதிகரிக்ககூடியது காசநோய் என்றும் நினைவுறுத்தினார்.

நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு காசநோய் கண்ட 24,220 பேரில் 1696 பேர் மரணம் அடைந்துள்ளனர்.அந்த எண்ணிக்கை கடந்த 2016இல் 25,739 ஆக உயர்ந்து மரண எண்ணிக்கையும் 1945 ஆக உயர்ந்தது.இஃது 14.7 விழுகாடு உயர்வு என்பது கவலைக்குரியது என்றார்.
காசநோய் போன்ற தொற்றுநோய்களை அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் மூலம் நாட்டில் இலகுவாய் ஊடுருவுகிறது.இதனை அலட்சியமாய் நாம் கடந்து விட முடியாது.இப்பிரச்னைக்கு ஆக்கப்பூர்வமாய் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.இதில் பொறுப்புணர்வோடு களமிறங்கவும் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
காசநோய் மட்டுமின்றி சளி, எச்1என்1,எச்5என்1,மலேரியா,எச் ஐ வி,போலியோ உட்பட பக்டெரியாக்கள மற்றும் வைரஸ் மூலம் பரவும் தொற்றுநோய்கள் விவகாரத்திலும் நாம் கவனமாக இருத்தல் வேண்டும்.சுகாதார அமைச்சு தீவிரமாய் செயல்படவும் வேண்டும்.

நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களால் ஊடுரும் காசநோயை கண்காணிக்கவும் தடுக்கவும் அது தொடர்பில் நன் திட்டங்களை முன்னெடுக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைத்தல் அவசியமாகிறது.அதில் கட்சி பேதமின்றி அரசாங்கம் சார்ந்த மற்றும் எதிர்கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருத்தல் விவேகமானது என்றும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி,அரசு ஊழியர்கள்,தனியார் நிறுவனம்,நிபுணத்துவ சுகாதார வல்லுநர்கள்,பொது இயக்கங்கள்,தகவல் ஊடகங்கள்,பொது மக்கள் என அனைத்து தரப்பும் ஒன்றுப்பட்டு களமிறங்கினால் இந்த நோய் இனி வருங்காலங்களில் மேலும் ஊடுருவாமல் தடுத்திட முடியும் என்பது நம்பிக்கையானது. வருங்காலத்தில் மலேசியா காசநோய் இல்லாத நாடு எனும் நிலையை எட்ட அனைவரின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகவும் அவசியமானது என்று ஆலோசனை கூறினார்.

அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் விவகாரத்தில் குறிப்பாக அவர்களின் மருத்துவ பரிசோதனையில் கடுமையான கண்காணிப்பும் நடைமுறைகளும் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்திய எட்மன்ட் சந்தாரா சுகாதார அமைச்சு ஆக்கப்பூர்வமான திட்டமிடலோடு இதனை முன்னெடுப்பது அவசியம் என்றும் நினைவுறுத்தினார்.

 


Pengarang :