SELANGOR

சிலாங்கூரில் இலவச கல்வி ஆரம்பித்துவிட்டது

ஷா ஆலம், ஆகஸ்ட் 9:

சிலாங்கூர் மாநில அரசாங்கம், 2008-இற்கு பிறகு இலவச கல்வி திட்டத்தை தொடங்கி விட்டதாக மாநில கல்வி, மனித வள மேம்பாடு, தொழில் நுட்ப மற்றும் புத்தாக்கம் ஆகிய நிரந்தரக் குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார். இது டெர்மாசிஸ்வா திட்டத்தின் கீழ் சிலாங்கூர் பல்கலைக் கழகத்தில் (யுனிசெல்) அமுல்படுத்தி வருகிறது என்றால் மிகையாகாது.

இத்திட்டத்தின் வழி ‘மெட்ரிகுலேசன்’ அல்லது அடிப்படை கல்வி பயிலும்   யுனிசெல் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

nik-nazmi

 

 

 

 

 

”   யுனிசெல்லில் டெர்மாசிஸ்வா திட்டத்தின் கீழ் அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள் தொடர்ந்து இளங்கலை பட்டப்படிப்பு இங்கு மேற்கொண்டால் இலவசமாக வழங்கப்படும். யுனிசெல்லின் கல்வி கட்டணம் ஒப்பிடுகையில் மற்ற தனியார் பல்கலைக் கழகங்களை விட குறைவு. மேலும் பரிவுமிக்க மக்கள் நல திட்டங்களின் வழி பல்கலைக் கழக நுழைவு பரிசும் கிடைக்கிறது. இது மட்டுமில்லாமல் மாநில அரசாங்கம் சிலாங்கூர்கூ கல்வி உதவித்தொகை, பெடுலி சிஸ்வா, வட்டியில்லா கல்வி கடனுதவி மற்றும் ‘பிரேன் பேங்க்’ எனும் பிரசித்திபெற்ற அனைத்துலக பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்டப்படிப்பு கல்வி உதவித்தொகை போன்றவை அடங்கும்,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் டத்தோ ஸ்ரீ ஜமால் யூனுஸ் யுனிசெல் பல்கலைக் கழக முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி இலவச கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில் நிக் நஸ்மி நிக் அமாட் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

#கேஜிஎஸ்


Pengarang :