SELANGOR

சிலாங்கூர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிஏசி கூட்டத்திற்கு தொடர்ந்து வருவதில்லை

ஷா ஆலம், ஆகஸ்ட் 18:

சிலாங்கூர் சட்ட மன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து சிலாங்கூரின் சட்ட மன்றத்தின் கீழ் இயங்கும் பொது கணக்கு குழு (பிஏசி) கூட்டத்திற்கு மட்டம் போட்டு வருகின்றனர். சிலாங்கூர் மாநிலத்தை குறை கூறி வரும் இவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்று குழுவின் உறுப்பினர் பத்து தீகா சட்ட மன்ற உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் கூறினார். இந்த ஆண்டிற்கான ஏழாவது கூட்டத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

 

Rodziah

 

 

 

 

இதனிடையே, சிலாங்கூர் சட்ட மன்ற பொது கணக்கு குழுவின் தலைவர் எங் சியூ லிம் பேசுகையில், கடந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை கண்டு வேதனைப் படுவதாக பேசிய போதிலும் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொண்டு சிலாங்கூர் வாழ் மக்களின் மேம்பாட்டிற்காக தங்களின் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

”   11 தடவை பொது கணக்கு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. சுங்கை பூரோங் சட்ட மன்ற உறுப்பினர் ஒரே தடவை வந்துள்ளார். ஜெராம் சட்ட மன்ற உறுப்பினர் வந்ததே கிடையாது. இந்த ஆண்டு ஆறு தடவை கூட்டம் நடைபெற்றுள்ளது, ஆனால் ஒரு போதும் வரவில்லை. நாடாளுமன்றத்தில் பாக்காத்தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் போது தேசிய முன்னணி ஆதிக்கம் கொண்ட பொது கணக்கு குழு சோர்ந்து செயல் படும் வேளையில், சிலாங்கூரில் தலைக்கீழாக இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :