PBTRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்றங்கள் மீது 74% மக்கள் திருப்தியாக உள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது

ஷா ஆலம், ஆகஸ்ட் 6:

மெர்டேக்கா கருத்துக்கணிப்பு ஆய்வு மையம் (மெர்டேக்கா சென்டர்) நடத்திய ஆய்வின் படி சிலாங்கூர் வாழ் மக்கள் ஊராட்சி மன்றங்களின் சேவை மீது திருப்தியாக உள்ளனர் என்று கூறுகிறது. 2016-ஆம் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் சிலாங்கூர் மக்களின் திருப்தி நிலை 74% எட்டியது என்று அறிக்கை கூறுகிறது.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயலாளர், டத்தோ முகமட் அமீன் அமாட் ஆயா கூறுகையில், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் மிக சிறந்த அடைவுநிலையை கொண்டதாக உள்ளது. கடந்த ஆண்டிற்கான சேவை தரம் 18% உயர்ந்த நிலையில் இருப்பதாக கூறினார். அடுத்து இடத்தில் கிள்ளான் நகராண்மை கழகமும் மூன்றாவது வரிசையில் அம்பாங் ஜெயா நகராண்மை கழகமும் இருப்பதாக முகமட் அமீன் கூறினார்.

ஷா ஆலம் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற கிள்ளான் நகராண்மை கழகத்தின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

மேலும் கூறுகையில், பொது மக்களின் புகார்களும் குறைந்த நிலையில் உள்ளது என்றார். 2015-இல் 21% இருந்த நிலை 2016-இல் 15% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.

இந்த அடைவுநிலை, நகராண்மை கழக பணியாளர்கள் மேலும் தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க ஊக்குவிப்பாக அமையும் என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :