NATIONAL

திருமண விலக்கு சட்டத்திருத்த மசோதா மீட்டுக்கொள்ளப்பட்டது ஏன் ?

கோலா லம்பூர், ஆகஸ்ட் 10:

நாட்டின் மக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளிடையே எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த 1976 திருமண – மணவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்திலிருந்து அரசாங்கம் மீட்டுக்கொள்ளப்பட்டதைக் கண்டு தாம் அதிர்ச்சியும், கவலையும் அடைவதாக ஈப்போ பாராட் மக்களவை உறுப்பினர் குலசேகரன் தெரிவித்தார்.

நாட்டில் பூதகரமாக அங்காங்கே நடந்துக் கொண்டிருக்கும் ஒருதலைப்பட்ச குழந்தைகள் மதமாற்றுக்கு எதிராக முற்றுப்புள்ளி வைக்கயிருக்கும் இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்காமல் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது அரசாங்கம் மக்களின் பிரச்சனைகளை களைய தவறியதை மெய்ப்பிக்கின்றன என குல குற்றம்சாட்டினார்.

மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சர் இதற்கு மாற்றாக புதிய சட்டத்திருத்த மசோதா தக்கல் செய்யப்படும் என அறிவித்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இந்த புதிய சட்டத்திருத்த மசோதா அரசியலைமைப்பு சட்டவிதிக்குட்பட்டு அமைந்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பினார். கடந்த ஆண்டு முதலே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு வந்து முழுமையாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டியதை, காலம் தாழ்த்தி நாடாளுமன்றத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டதை எதிரணியினர் மற்றும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுத்தேர்தல் நெருங்கும் சமயத்தில் வேண்டுமென்றே குறிப்பிட்ட அரசியல் காரணத்திற்காகவே இந்த சட்டத்திருத்த மசோதா மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளதா? யாரை திருப்திப்படுத்த அரசாங்கம் இவ்வாறு மக்களுக்கு எதிர்ப்பாக செயல்படுகிறது. இந்த சட்டத்திருத்த மசோதாவைனால் தனக்கும் தனது பிள்ளைக்கும் நீதிக் கிடைக்கும் என பெரிதும் நம்பியிருந்த இந்திராகாந்தி அவர்கள் அரசாங்கத்தின் இம்முடிவினால் மனமுடைந்ததுடன், தானும் தனது பிள்ளைகளும் 8 ஆண்டுகள் காத்திருந்தது வீண் என கூறியிருக்கிறார்.

இவ்விவகாரம் குறித்து அரசாங்கம் புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யும் என மீண்டும் அறிவித்துள்ளது என்பது, இத்தனை காலமும் நாடாளுமன்றத்தில் விவாதித்து வந்த அனைத்து மக்களவை உறுப்பினர்களின் விவாதமும் வீண் என்று வகைப்படுத்தினார். மீட்டுக்கொள்ளப்பட்டதை மீண்டும் தாக்கல் செய்து விவாதித்து நாட்டில் நடக்கும் ஒருதலைப்பட்ச சிறார் மதமாற்றுப் பிரச்சனைகளுக்கு தீர்வு பிறக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என ஜசெகவின் உதவித்தலைவருமான அவர் கேட்டுக்கொண்டார்.

 


Pengarang :