NATIONAL

துன் மகாதீர், அப்ஃபெண்டியை சத்தியம் செய்து சொல்லுமாறு சவால் விட்டார்

ஷா ஆலம், ஆகஸ்ட் 14:

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் மீது வழக்கு விசாரணை பதிவு செய்யாமல் முடிவு எடுத்த தனது நடவடிக்கையை நீதி, நேர்மையான மற்றும் வெளிப்படையாக ஒன்று என நாட்டின் தலைமை வழக்கறிஞர், டான்ஸ்ரீ முகமட் அப்ஃபெண்டி அலியை சத்தியம் செய்யுமாறு பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் ஆலோசகர் துன் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார். தாமும் முகமட் அப்ஃபெண்டி உடன் சேர்ந்து சத்தியம் செய்வதாக கூறினார்.

TUN M (1)

 

 

 

 

 

 

 

”   ஏன் நீங்கள் நஜிப்பிற்கு ஆதரவாக இருக்கிறீர்கள்? நஜிப் மக்களின் பணத்தை திருடி விட்டார். அப்ஃபெண்டி நஜிப் திருடவில்லை என்று கூறுகிறார். அப்ஃபெண்டி சொன்னால் ‘உண்மையாக’ தான் இருக்கும். நான் அப்ஃபெண்டிக்கு சவால் விடுகிறேன். அப்ஃபெண்டி சத்தியம் செய்து ‘உண்மையை’ சொல்லட்டும். நானும் அவரோடு சத்தியம் செய்யத் தயாராக இருக்கிறேன்,” என்று ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெற்ற ‘எதையும் மறைக்கத் தேவையில்லை 2.0’ நிகழ்ச்சியில் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது, இது தொடரக்கூடாது மாறாக உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் என்றும் கூக

நேற்று மீண்டும், நஜிப் ‘எதையும் மறைக்கத் தேவையில்லை 2.0’ நிகழ்ச்சிக்கு வரத் தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :