SELANGOR

நிர்வாகத்தில் ஊழல் தலைதூக்கினால் பொருளாதார வளம் நிலைக்காது

ஷா ஆலம், ஆகஸ்ட் 14:

ஊழலில் மலிந்து கிடக்கும் மற்றும் பேராசை கொண்ட ஆட்சியாளர்கள் கண்டிப்பாக நீண்டகாலமாக மேம்படுத்தி வந்தாலும், இந்த முன்னேற்றம் நிலையாக இருக்காது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

1997 மற்றும் 1998 காலகட்டத்தில் படுமோசமான பொருளாதார மந்த நிலையில் எதிர் நோக்கினாலும் நிர்வாகத்தை பொறுப்பேற்றிருந்த துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறந்த முறையில் கையாண்டு முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

”   பாக்காத்தான் ராக்யாட் முன்பு வளர்ச்சி அடைந்து இருந்தாலும் அல்லது பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் போது முன்னேற்றம் அடைந்த மாநிலமாக இருந்தாலும், அப்படி நிர்வாகத்தில் ஊழல் மற்றும் பதவி துஷ்பிரயோகம் தலைதூக்கினால் நிச்சயமாக முன்னேற்றத்தை தொடர்ந்து தற்காக்க முடியாது. அன்வார் இப்ராஹிம் நிதி அமைச்சராக இருந்தபோது பொருளாதார வளர்ச்சி சிறந்த நிலையில் இருந்தது, ஆனால் இன்று அப்படி நிலையில் இல்லை. நாட்டின் கடன் தொகை உயர்ந்து கொண்டே போகிறது. நாட்டு மக்கள் தொடர்ந்து கஷ்டப்படுகிறார்கள்,” என்று கூறினார்.

மாநில அரசாங்க ஊழியர்களின் மாதாந்திர பேரணி மற்றும் சிலாங்கூர் மாநில அளவிலான 2017-இன் ‘மலேசிய கொடியை பறக்க விடுவோம்’ பிரச்சாரத்தை தொடக்கி வைத்த போது ஜூப்ளி பேராக் பல்நோக்கு மண்டபத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 2008-க்கு பிறகு மாநிலத்தை கைப்பற்றியது முதல் பல்வேறு வழிகளில் சிறந்த நிர்வாகத்தை கொண்டு மாநிலத்திற்கு முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி வருகிறோம் என்றார்.

”   மகாதீர் காலகட்டத்தில் பொருளாதார மந்த நிலையில் இருந்தாலும் ஜிஎஸ்டி வரியை மக்கள் மீது சுமத்தப்படவில்லை. அப்படி அவரின் ஆட்சிக் காலத்தில் ஊழல் செய்து இருந்தால், இன்று நாடு இவ்வளவு வளர்ச்சி அடைந்த நிலை ஏற்பட்டிருக்காது. பாக்காத்தான் சிறந்த முறையில் கையாண்டு பொறுப்புள்ள மற்றும் நேர்மையான நிர்வாகத்தை வழி நடத்தி சேமிப்பு அதிகரித்து வருகிறது,” என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :