ANTARABANGSANATIONAL

நீர்மூழ்கி கப்பல் மோசடி, ரசாக் பகிண்டா பிரான்ஸில் குற்றம் சாட்டப்பட்டார்

கோலா லம்பூர், ஆகஸ்ட் 1:

நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் நெருங்கிய சகாவான அப்துல் ரசாக் பகிண்டா 2002-இல் மலேசியா கொள்முதல் செய்த நீர்மூழ்கி கப்பல் பரிவர்த்தனையில் கையூட்டு பெற்றதாக பிரான்ஸ் நாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று நீதித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

razak-scorpene-submarines-300x202

 

 

 

 

 

 

ஏஎப்ஃபி செய்தி நிறுவனத்தின் தகவல் படி, ரசாக் பகிண்டா 2002-இல் இருந்து 2008 வரை தற்காப்பு அமைச்சராக இருந்த நஜிப் ரசாக்கிற்கு நீர்மூழ்கி கப்பல் தொடர்பில் ஆலோசகராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நஜிப் ஏறக்குறைய  €1 பில்லியன் (ரிம 5.06 பில்லியன்) மதிப்பிலான இரண்டு ஸ்கோர்பியன் நீர்மூழ்கி கப்பல்களும் மற்றொரு அகோஸ்தா நீர்மூழ்கி கப்பலும் டிசிஎன்னிடம் வாங்கினார். டிசிஎன் தற்காப்பு நிறுவனமான தேல்ஸ் உடன் தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010-இல் மனித உரிமை இயக்கமான, சுவாராம் நீர்மூழ்கி கப்பல் பரிவர்த்தனை தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற புகார் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

#கேஜிஎஸ்


Pengarang :