ANTARABANGSA

பாகிஸ்தான் புதிய பிரதமர் 47 அமைச்சர்களை நியமித்தார்

இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 5:

பாகிஸ்தான் அரசாங்கத்தின் புதிய பிரதமர் ஷாஹிட் காக்கன் அபாஸி, நீக்கப்பட்ட பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகாக்களையும் தனது அமைச்சரவையில்  இணைத்துள்ளது 2018-இல் நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு தயாராகும் முயற்சி ஆகும்.

மிகவும் பலம் பொருந்திய நிதி அமைச்சரான  இஸ்ஹாக் டாரை மீண்டும் அதே பதவியில் அமர்த்தப் பட்டுள்ளது அரசியல் யுக்தியே ஆகும். உச்ச நீதிமன்றத்தில் குற்றவியல் விசாரணையை எதிர் நோக்கி உள்ளார் இஸ்ஹாக் என்று ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு ஷாரிபின் சகாவான காவாஜா ஹஸிப் வெளியுறவு அமைச்சர், தற்காப்பு மற்றும் எரிசக்தி போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய அமைச்சரவை எண்ணிக்கை முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. 190 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட பாகிஸ்தான் நாட்டில் 47 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :