ECONOMYSELANGOR

பிகேஎன்எஸ் 44 சொத்துடமைகளை விற்க குறி வைத்துள்ளது

ஷா ஆலம், ஆகஸ்ட் 21:

சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகம் (பிகேஎன்எஸ்) பிளாஸா பிகேஎன்எஸ்-இல் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 10 நாட்களுக்கு நடக்கும் சொத்துடமை கண்காட்சியில் ரிம 12 மில்லியன் மதிப்பிலான 44 சொத்துடமைகளை விற்பனை செய்ய இலக்கு கொண்டுள்ளது  என்று பிகேஎன்எஸ்-இன் மத்திய பிரதேச சொத்துடமை விற்பனை நிர்வாகி, முகமட் வாஸீர் அப்துல் கானி கூறினார். பிகேஎன்எஸ் நிறுவனத்தின் 53-ஆம் நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கண்காட்சியில் வருகையாளர்களுக்கு கழகத்தின் சொத்துடமை திட்டங்கள் குறித்து விவரங்கள் மற்றும் விழிப்புணர்வு நடத்தப்படும் என்றார்.

பிகேஎன்எஸ்-இன் வீடமைப்பு திட்டங்களான சிட்டி பெர்ஜாயாவில் அங்கூன் 1 & 2 மற்றும் வேகா ரெசிடென்சி, பெர்னாம் ஜெயாவில் சித்ரீனா 2 & 3, ஷா ஆலமில் ஒபல் ரெசிடென்சி மற்றும் கோத்தா புத்ரியில் புத்ரி டாபிஃனா 2 போன்றவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

”   இந்த கண்காட்சியில் கிள்ளான் பள்ளத்தாக்குக்கு வெளியே உள்ள சொத்துடமைகளை வாங்க பொது மக்களுக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம். கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே மேம்படுத்தப்பட்ட வீடமைப்பு திட்டத்தின் மீது மக்களின் கருத்துகளை பெற்றுள்ளோம். 60% வீடமைப்பு திட்டங்கள் அந்தாரா காப்பி, ஈஜோக், கிள்ளான் மற்றும் கோலா சிலாங்கூர் வட்டாரங்களிலும் மேம்படுத்தி இருக்கிறோம்,” என்று இன்சென்திப்ஃ மைபிகேஎன்எஸ் தொடக்க விழாவில் பேசினார்.

#கேஜிஎஸ்


Pengarang :