ANTARABANGSA

பிரக்ஸிட்: பிரிட்டன் ரிம 201 பில்லியனை செலுத்த தயாராக உள்ளது

குலோபல், ஆகஸ்ட் 6:

பிரிட்டன், ஐரோப்பா ஒன்றியத்தில் இருந்து வெளியேற 40 பில்லியன் ஈரோ அல்லது ரிம 201 பில்லியன் இழப்பீடு தொகையை தருவதற்கு தயாராக உள்ளது என்று தெ டெலிகிராப் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனாலும், பிரிட்டன் இந்த தொகையை கொடுப்பதற்கு முன் ஐரோப்பா ஒன்றியம், வர்த்தக ஒப்பந்தம் மற்றும் எதிர்காலத்தில் பல்வேறு வழிகளில் உறவு வைத்துக் கொள்ளும் உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக செய்தி வெளியானது.

வைட்ஹோல் மற்றும் பிரிட்டன் அரசாங்க தகவல் படி மேற்கண்ட தொகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்பு பிரதமர் தெரேசா மே £50 பில்லியன் ஒத்துக்கொண்டது மிக அதிகமான தொகை என்றும் இந்த தகவலை மறுத்து விட்டது.

brexit (1)

 

 

 

 

ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியம்  £60 பில்லியன் தொகையை கேட்டதாகவும், மேலும் எதிர் காலத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்கப் பட்டது என்று டெலிகிராப் செய்தி கூறுகிறது.

டெலிகிராப் செய்தியை சம்பந்தப்பட்ட அரசாங்க இலாகா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது வரை பிரிட்டன், பிரக்ஸிட் தொடர்பாக இழப்பீடு தொகை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

”   ஐரோப்பிய ஒன்றியம்  £60 பில்லியனை அதிகப்பட்ச தொகையை நிர்ணயிக்கும் முயற்சியை உணருகிறோம். ஆனாலும் அவர்களின் குறைந்த பட்ச தொகை  £50 பில்லியன் ஆகும். பிரிட்டனின் பரிந்துரை £30 பில்லியனாக இருந்தாலும்  £40 பில்லியனை கொடுக்க முடியும். இது வரை அரசியல்வாதியோ அல்லது பொது மக்களுக்கோ இந்த விவரங்கள் தெரியாது,” என்று வைட்ஹோல் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

( வைட்ஹோல்- மலேசியா நாட்டின் புத்ரா ஜெயா போன்ற அரசாங்க தலைமையகம் ஆகும்)

#கேஜிஎஸ்

=EZY=


Pengarang :