SELANGOR

பெடுலி சேஹாட் சுகாதார திட்டத்தை கண்டு நிறையபேர் பொறாமை

ஷா ஆலம், ஆகஸ்ட் 3:

ஆகஸ்ட் 1 வரை 34,780 பேர்கள் பெடுலி சேஹாட் சுகாதார திட்டத்தின் சிறப்பு பிரிவின் கீழ் பதிந்துள்ளனர் என்று சிலாங்கூர் மாநில சுகாதாரம், சமூக நலம், மகளிர் மற்றும் குடும்ப நலன் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார்.

சிறப்பு பிரிவின் கீழ் ஸாகாட் சிலாங்கூர் வாரியத்தில் பதிந்துள்ள ஏழைகள், சிலாங்கூர் பாரம்பரிய குழந்தைகள் வாரியம் (யாவாஸ்), டாரூல் எசான் இஸ்லாமிய வாரியம் (யீடே), தெய்வக் குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் உடல் பேறு குறைந்தவர்கள் போன்றவர்கள் அடங்கும் என்றார் அவர்.

இதன் மூலம் பி40 வர்க்கத்தினர், குறிப்பாக திருமணம் ஆகாத மூத்த குடிமக்கள், தெய்வக் குழந்தைகள் போன்றவர்களும் ரிம 125 மில்லியன் ஒதுக்கீடு செய்த திட்டத்தில் பங்கு கொள்ளலாம் என்றார்.

”   பெடுலி சேஹாட் திட்டத்தை கண்டு நிறைய பேர் பொறாமை ஏற்பட்டது தெரியும். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தி வருவதை ஜீரணிக்க முடியாத சூழ்நிலையில் அதிர்ந்து போய் உள்ளனர். ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின் கலங்கி விட்டது தெரியும். தற்போது கெராக்கான் கட்சியும் பெடுலி சேஹாட் திட்டத்தை கண்டு ஆடிப் போய் விட்டனர்,” என்று கூறினார்.

 

YB Daroyah

 

 

 

 

 

 

 

இந்த வருடம் தொடக்கத்தில் ஆரம்பித்த பெடுலி சேஹாட் திட்டம், இதுவரை 237,523 விண்ணப்பங்களை பெற்றுள்ளது. விண்ணப்பம் செய்யும் நடைமுறை எல்லா சட்ட மன்றங்களிலும் ஒரே மாதிரி இருக்கும். விண்ணப்பம் இணையதளம் மூலம் செய்து கொள்ளலாம், ஆனால் சட்ட மன்ற உறுப்பினர் அல்லது ஒருங்கிணைப்பாளர் ஆவணங்களை ஊர்ஜிதம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

#கேஜிஎஸ்


Pengarang :