NATIONAL

பெல்டா முன்னாள் தலைமை செயல் அதிகாரி, லண்டனில் தங்கும் விடுதி பரிவர்த்தனை தொடர்பில் 4 நாட்களுக்கு காவல்

புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 1:

பெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (எப்ஃஐசி) நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி லண்டனில் கொள்முதல் செய்யப்பட்ட தங்கும் விடுதி தொடர்பில் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மாஜிஸ்திரேட் நிக் இஸ்பாஃனீ தஸ்னீம் வான் அப்துல் ரஹ்மான், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோரிக்கையின் அடிப்படையில் ஆகஸ்ட் 4 வரை காவல் நீட்டிக்கும்படி இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆணையிட்டார்.

காவல் நீட்டிப்பு செய்யப்பட்ட நபர் 46 வயதை கொண்டவர் எனவும் நெகிரி செம்பிலான் மாநிலத்தை சேர்ந்த அரசு சார்புடைய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட நபரை இரவு 9.20-க்கு அதன் தலைமையகத்தில் 12 மணி நேர விசாரணைக்கு பிறகு கைது செய்தது. ஊழல் தடுப்பு ஆணையம் லண்டன், கென்சிங்டனில் 2013-இல் இருந்து 2015 வரை வாங்கப்பட்ட தங்கும் விடுதி தொடர்பில் விசாரணையை முடுக்கிவிட்டது. சந்தையின் விலைக்கு மேல் வாங்கியதாகவும், இதனால் பெல்டா நிறுவனத்திற்கு மில்லியன் மதிப்பிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. பெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் தனது அறிக்கையில் தங்கும் விடுதி ரிம 330 மில்லியன் மதிப்பில் 2014 டிசம்பர் 16-இல் வாங்கப்பட்டதாக கூறியது.

தகவல்: பெர்னாமா செய்தி

#கேஜிஎஸ்


Pengarang :