SELANGOR

பேராக் மக்கள், சிலாங்கூரில் வழங்கப்படும் திட்டங்களைப் பற்றிய கண்ணோட்டம்

சிலாங்கூர் மக்களே கண்களை திறந்து பார்க்க வேண்டிய விஷயம் இது. அண்மையில் தமிழ் நாளிதழ் ஒன்றில் சிலாங்கூர் மாநிலத்தை குறை கூறி வரும் இவர்கள் தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சி செய்யும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?

பேராக் மாநிலத்தில் இந்தியர்களுக்கு ஆலயம், தமிழ்ப்பள்ளி அல்லது சுடுகாடு நிலங்கள் அவ்வளவு சுலபமாக கிடைக்காது. 20 வருடம் மேல கெஞ்சி கூத்தாடி பிறகுதான் நடக்கும்.அதுவும் அம்னோ மனம் இரங்கினால் மட்டுமே இது சாத்தியம். எங்களுக்கு இங்கே சலுகைகள் மிகவும் குறைவு. இலவச பேருந்து, இலவச சுகாதார அட்டை, ஹிஜ்ரா கடனுதவி மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் பரிவு மிக்க மக்கள் நல திட்டங்கள் எதுவும் இல்லை.

சிலாங்கூர் மக்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்.சலுகைகள் உங்களுக்கு அதிகம் அனுபவிக்க வேண்டிய நிலையில் அதை தொடர்ந்து வாருங்கள்.ஏமாந்து போய் அம்னோவிடம்  சிக்கிவிடதிர்கள். பேராக் மாநிலத்தில் நாங்கள் பெரும் துயரத்தில் வாழ்கின்றோம் மக்களே.பினாங்கு சிலாங்கூர் மக்களே நீங்கள் வாழும் வாழ்க்கை தரம் உயர்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

89 இந்து ஆலயங்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டதாக சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர்மாமாண்புமிகு கணபதி ராவ் செய்தி வெளியிட்டுள்ளதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இது 2013-இல் இருந்து இன்று வரை மட்டுமே என்றும் 14 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் உறுதி செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்னோ தேசிய முன்னணி ஆட்சியில் இந்தியர்களுக்கு சலுகைகள் மிகவும் குறைவு மக்களே.இன்றைய தமிழ் பத்திரிகைகளில் இந்தியர்களின் பிரச்சனைகளை களைய உதவிய பட்டியலில் உள்ள பெயர்கள் பார்த்தால் பெரும்பாலும் மாற்று அரசாங்க இந்தியர்களே முன்னிலை வகிக்கின்றனர்.நான் யாரையும் கூறை சொல்லவில்லை.

பாக்காத்தான் தலைவர்கள் நமது பிரச்னைகளை சரியாக நேர்மையாக ஊழல் இல்லாமல் நேர்மையாக செய்துள்ளனர். இவ்வளவு காலம் இதற்கு தானே பாடுபட்டோம்.நீங்கள் உணருங்கள் நல்ல அரசாங்கம் உங்கள் கையில்.எங்களுக்கோ நரக அரசாங்கம்.எல்லாவற்றிலும் பகுப்பாடு. நேர்மை இல்லாத அரசாங்கம் இங்கே.சிலாங்கூர் மக்களே, தயவு செய்து நீங்கள் உணருங்கள்.

இப்படிக்கு

பேராக் வாழ் மக்கள்


Pengarang :