SELANGOR

மந்திரி பெசார்: நாட்டு மக்களை முதிர்ச்சியில்லாதவர்கள் என்று கருத வேண்டாம்

காஜாங், ஆகஸ்ட் 5:

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் மலேசியா நாட்டு மக்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பேசுகையில் , சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநில மக்கள் 2008-இல் 12-வது பொதுத் தேர்தலில் சிறந்த முறையில் முடிவு செய்ய முடியும் என்று நிருபித்தனர்.

ஆட்சி மாற்றம் இரண்டு மாநிலங்களில் எந்த ஒரு சச்சரவு மற்றும் அமைதியான முறையில் நடைபெற்றது என்று கூறினார்.

”   பிரதமர் அவர்களே, சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களின் மக்கள் ஆட்சியை மாற்றம் செய்தபோது எந்த பிரச்சனையும் எழவில்லை. 2008-க்கு முன்பை விட சிலாங்கூர் மாநில மக்கள் சிறப்பாக மற்றும் வளமாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர். ஆகவே, நாட்டு மக்கள் சிறந்த சிந்தனை வளம் கொண்டவர்கள. அவர்கள் அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள், நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்ட சரியான முறையில் திட்டமிட்டு முடிவு எடுப்பார்கள்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

Azmin-Rakyat

 

 

 

 

 

காஜாங் நகராண்மை கழகத்தின் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவையின் இரண்டு புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வுக்கு பிறகு பேசினார். நாட்டு மக்கள், இன்று நேர்மையான, ஊழலற்ற, வெளிப்படையான ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க துடிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

 


Pengarang :