SELANGOR

மந்திரி பெசார்: 14-வது பொதுத் தேர்தலுக்கு முன் மாநில அரசுக்கு எதிராக பல நடவடிக்கை தொடரும்

செப்பாங், ஆகஸ்ட் 26:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, 14-வது பொதுத் தேர்தலுக்குள் மத்திய அரசாங்கத்தை சேர்ந்த அதிகாரிகள் மாநில அரசாங்கம் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பார்கள். இந்த நடவடிக்கைகள் மூலம் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மீது மக்கள் எதிர்மறையான எண்ணம் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் படுகிறார்கள். பொருளாதார வளர்ச்சியில் சிறந்த நிலையை அடைந்துள்ள சிலாங்கூர் நிர்வாகத்தை மாசுபடுத்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.

”   இந்த நடவடிக்கைகள் 14-வது பொதுத் தேர்தல் வரை தொடர்ந்து நடைபெறும். சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை பெற்று வருவதால் பலர் நம் மீது பொறாமை கொண்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே,” என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், மந்திரி பெசார் பெறுநிறுவனம் (எம்பிஐ) மற்றும் சிலாங்கூர் பல்கலைக் கழகம் (யுனிசெல்) ஆகியவற்றின் மீது விசாரணை நடத்தி வரும் தொடர்பில் செய்தியாளர் கேட்டக் கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

அஸ்மின் அலி தனது குழுவினருடன் ஜூரீச், சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

BANGUNAN SUK

 

 

 

 

 

எது எப்படி இருந்தாலும், மாநில அரசாங்கம் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விசாரணை செய்ய ஒத்துழைப்பு வழங்கும் என்றும் ஆனால் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஆணையம் நீதி, நேர்மை மற்றும் தொழில்முறையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

”   நாம் ஊழல் தடுப்பு ஆணையத்தை தொழில்முறையில் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால் பொது மக்களின் நம்பிக்கையை இழக்கும் அபாயத்தில் ஆணையம் எதிர் நோக்க நேரிடும். எம்பிஐ மற்றும் யுனிசெல் உயர்நிலை அதிகாரிகள் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். மாநில அரசாங்கமும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதி கூறுகிறேன்,” என்று கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :