SUKANKINI

மலேசியா-இந்தோனிசியா இடையிலான கால்பந்து ஆட்டம், பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

ஷா ஆலம், ஆகஸ்ட் 26:

இன்று இரவு ஷா ஆலம் அரங்கில் நடைபெறவிருக்கும் 2017-இன் சீ விளையாட்டு கால்பந்து போட்டியின் அரையிறுதியில் மோதும் மலேசியா மற்றும் இந்தோனேசியா இடையிலான ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டத்தோ ஓங் கிம் சுவியின் கீழ் களம் இறங்கும் மலேசியா 23-வயதிற்குற்பட்ட அணி இந்தோனேசியா அணியுடன் மோதும் ஆட்டம் திடலில் மட்டுமில்லாமல் விளையாட்டு ரசிகர்கள் மத்தியிலும் பல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் என்றால் அது மிகையாகாது.

இந்தோனேசியா நாட்டின் தேசிய கொடியை 2017 சீ விளையாட்டு போட்டியின் சிறப்பிதழில் தலைக்கீழாக அச்சிடப்பட்ட சம்பவத்திற்கு பிறகு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட நிலையில் இன்னும் தணியாமல் இருக்கிறது என்று கூறலாம்.

ஆனாலும், கிம் சுவி இந்த சம்பவத்தை பற்றி நினைக்காமல் ஆட்டத்தில் கவனம் செலுத்தி இறுதி ஆட்டத்திற்கு தமது அணியை கொண்டு செல்ல கங்கணம் கொண்டுள்ளார்.

மற்றுமொரு அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு வெற்றியாளர் தாய்லாந்து, மியான்மரை செலாயாங் அரங்கில் மாலை 4 மணிக்கு சந்திக்கிறது.

#கேஜிஎஸ்


Pengarang :