SELANGOR

யாக்கோப், நோ ஒமாரை கோத்தா அங்கிரீக்கில் நிறுத்துமாறு நஜிப்பிடம் சவால்!!!

ஷா ஆலம், ஆகஸ்ட் 8:

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், அம்னோ தேசிய முன்னணி சிலாங்கூரை கைப்பற்றும் முயற்சியில் ஷா ஆலம் நாடாளுமன்றம் மற்றும் அதன் இரண்டு சட்ட மன்றங்களையும் வெற்றி பெற வேண்டும் என்ற அறைகூவலை அடிப்படையில் கோத்தா அங்கிரீக் சட்ட மன்ற உறுப்பினர் முனைவர் யாக்கோப் சப்பாரி பதில் அளித்தார்.

தனது அகப்பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், நஜிப் முதலில் சிலாங்கூர் அம்னோ தலைவர் டான்ஸ்ரீ நோ ஒமாரை கோத்தா அங்கிரீக் சட்ட மன்றத்தில் போட்டியிடும் படி கட்டளையிட வேண்டும் என்றார். கோத்தா அங்கிரீக் சட்ட மன்றத்தில் யாக்கோப்  2008-இல் மற்றும் 2013-இல் இரண்டு முறை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

”   பிரதமர் நஜிப்பின் உரையில், அம்னோ சிலாங்கூரை கைப்பற்ற வேண்டும் என்றால் ஷா ஆலம் சட்ட மன்றங்களை முதலில் வெல்ல வேண்டும். அப்படி 1எம்டிபி ஊழலினால் திக்குமுக்காடி போய் இருக்கும் பிரதமர் சிலாங்கூரை கைப்பற்ற வேண்டும் என்றால், நோ ஒமாரை சட்ட மன்றத்தில் போட்டியிடும் படி கட்டளை இடப்பட வேண்டும்.

YAAKOB

 

 

 

 

மேலும் நோ ஒமார் ஷா ஆலமில் குடியிருப்பதால் கோத்தா அங்கிரீக் சட்ட மன்றத்தில் போட்டியிடட்டும். அம்னோ மற்றும் நோ ஒமாரின் செயல்பாடுகளை நகரத்து மக்கள் மதிப்பீடு செய்யட்டும்,” என்று தனது அகப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து யாக்கோப், நஜிப் ஷா ஆலம் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது தொடர்பில் சாடினார். நாட்டின் பிரதமரான நஜிப் எப்போது வேண்டுமானாலும் எதையும் நிறைவேற்ற முடியும், மாறாக வாக்குறுதிகளை கொடுக்க தேவையில்லை. நஜிப் மற்றும் அம்னோ தேசிய முன்னணி தற்போது நாட்டை நிர்வகிக்கித்து வருவதால் வாக்குறுதி அளிக்காமல், உடனடியாக நிறைவேற்றுமாறு அறிவுறுத்தினார்.

”  ஒரு நாட்டின் பிரதமர் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். முதலில் நிறைவேற்றுங்கள், நாங்கள் இந்த ஆண்டு டிசம்பருக்குள்  உங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்,” என்று சுட்டிக் காட்டினார்.

#கேஜிஎஸ்


Pengarang :