PENDIDIKANSELANGOR

யுனிசெல்லின் திறந்த நாள் கோலாகலமாக நடந்தது

ஷா ஆலம், ஆகஸ்ட் 26:

சிலாங்கூரில் உள்ள 20 இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 700 மாணவர்கள் சிலாங்கூர் பல்கலைக் கழகம் (யுனிசெல்) ஏற்பாடு செய்த திறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

யுனிசெல்லின் தொழில்முறை தொடர்பு பிரிவு இயக்குனர், ஹஸ்ரில் அபு ஹாசன் கூறுகையில், இன்றும் நாளையும் நடைபெறும் நிகழ்ச்சியில் கல்வி கலந்துரையாடல் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது மாணவர்கள் யுனிசெல்லை பற்றி மேலும் விரிவாக தெரிந்துக் கொள்ள உதவுகிறது.

”   மாணவர்கள் கல்வி கலந்துரையாடல் மூலம் யுனிசெல்லில் கல்வி பெறும் வாய்ப்புகள் மற்றும் துறைகளை பற்றி விவரங்களை பெற்றனர். சிலாங்கூர் மாணவர்கள் அடிப்படை கல்வியை பெடுலி சிஸ்வா திட்டத்தின் வழி இலவசமாக பயிலும் வாய்ப்பு உள்ளது. இது மட்டுமில்லாமல் பல்கலைக்கழக நுழைவுப் பரிசு ரிம 1000-ம் சிலாங்கூர் மாணவர்களுக்கு வழங்கப்படும்,” என்று ஷா ஆலம் யுனிசெல் வளாகத்தில் திறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு சிலாங்கூர் இன்றுக்கு கூறினார் .

DSC_3870-1280x853

 

 

 

 

 

சிலாங்கூர் பல்கலைக் கழகத்தின் இணை பேராசிரியர் டத்தோ முனைவர் முகமட் ரிஸுவான் ஓத்மான் பேசுகையில், திறந்த நாள் நிகழ்வு பொது மக்களுக்கு யுனிசெல்லின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

unisel-prof-redzuan

 

 


Pengarang :