SELANGOR

12இல் 10 ஊராட்சி மன்றங்கள் 5 நட்சத்திர தகுதியை பெற்றது

ஷா ஆலம், ஆகஸ்ட் 9:
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களில் 10 ஊராட்சி மன்றங்கள் 5 நட்சத்திர தகுதியை பெற்றிருப்பதோடு மேலும் இரு ஊராட்சி மன்றங்கள் 4 நட்சத்திர தகுதியினை பெற்றிருப்பதாக நகர்புற மேம்பாடு மற்றும் வீடமைப்பு,ஊராட்சி துறை அமைச்சு அறிவித்ததாக மந்திரி பெசார் அலுவலக வியூக தொடர்புத்துறை இயக்குநர் யின் சாவ் லோங் தெரிவித்தார்.

இந்த தர உயர்வு அறிவிப்பு கடந்தாண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி 2016 நவம்பர் 10 ஆம் தேதி வரையிலான தரம் மேம்பாட்டு ஆய்வின் மற்றும் நடவடிக்கையின் அடிப்படையில் இஃது தேர்வு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இந்த தரம் உயர்வு அல்லது நட்சத்திர அந்தஸ்து வழங்கள் அது சார்ந்த துறைகளால் துள்ளியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறந்த நிர்வாகம், திறன் மிக்க நடவடிக்கை, ஆக்கப்பூர்வ சேவை தன்மை மற்றும் மக்களின் பார்வை உட்பட பல்வேறு நிலைகளை கருத்தில் கொண்டு நுண்ணியமான புள்ளிகாளால் இஃது விவேகமாய் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார்.
சுபாங் ஜெயா நகராண்மைக்கழகம், பெட்டாலிங் ஜெயா மாநகரமன்றம், சிப்பாங் நகராண்மைக்கழகம்,காஜாங் நகராண்மைக்கழகம்,ஷா ஆலாம் மாநகரமன்றம்,கோலா லாங்காட் மாவட்ட மன்றம்,அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகம்,செலாயாங் நகராண்மைக்கழகம்,கிள்ளான் நகராண்மைக் கழகம்,கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் ஆகியவை 5நட்சத்திர அந்தஸ்தை பெற்ற வேளையில் உலு சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய மாவட்டங்கள் 4நட்சத்திர அந்தஸ்தை பெற்றது.

இந்த நட்சத்திர அந்தஸ்து அங்கீகாரம் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் சிலாங்க்கூர் மாநில ஊராட்சி மன்றங்கள் அனைத்தும் சிறப்பாகவும் சரியான இலக்கோடும் பயணிக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிறந்த நிர்வாகத்தன்மையை கொண்ட மாநில அரசிற்கான சான்றாகவும் அஃது விளங்குவதாகவும் அவர் பெருமிதமாய் கூறினார்.

அதுமட்டுமின்றி,மெர்டெக்கா சென்டர்  மேற்கொண்ட ஆய்வின் படி சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்றங்களின் செயல்பாடுகளும் நிர்வாக சேவையும் 70 விழுகாடு நிறைவினையும் பாராட்டினையும் மக்கள் மத்தியில் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் மக்களின் நிலைத்தன்மையையும் அவர்களின் மதிப்பீட்டையும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமானதாகவும் சிறந்ததாகவும் கொண்டு செல்லும் இலக்கில் சிலாங்கூர் மாநில அனைத்து ஊராட்சி மன்றங்களும் தரமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படுவதாகவும் மாநில அரசின் இலக்கை அஃது நடைமுறப்படுத்துவதில் விவேகமாய் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழாக்கம் கு. குணசேகரன்


Pengarang :