RENCANA PILIHANSELANGOR

49% மலேசியர்கள், சிலாங்கூரின் நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது என கருத்து தெரிவித்துள்ளனர்

ஷா ஆலம், ஆகஸ்ட் 29:

டாரூல் எசான் கல்லூரியின் ஆய்வில் 49% மலேசியர்கள் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிர்வாகம் சிறப்பான முறையில் செயல்படுவதாகவும், அதே நேரத்தில் தேசிய முன்னணி ஆளும் மத்திய அரசாங்கத்தின் நிர்வாகம் வெறும் 29% மலேசியர்கள் மட்டுமே சிறப்பாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து உள்ளனர் என டாரூல் எசான் கல்லூரியின் துணைத் தலைவர் பேராசிரியர் டத்தோ முனைவர் முகமட் ரிஸுவான் ஓத்மான் நேற்று மாலையில் அதன் அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 14-வது பொதுத் தேர்தலையொட்டி நடத்தப்பட்ட #மூட்ராக்யாட் ஆய்வில் மேற்கண்டவாறு  தெரியவந்துள்ளது.

”   அம்னோ தேசிய முன்னணியின் மத்திய அரசாங்கம் மீதான மலேசியர்களின் நம்பிக்கை மிகவும் குறைந்த நிலையில் இருப்பதாகவும் வெறும் 29% மக்கள் மட்டுமே மனநிறைவு அடைவதாக தெரிவித்தனர். சிலாங்கூர் மாநில நிர்வாகம் 49%, பினாங்கு மாநிலம் 40% மற்றும் பாஸ் ஆளும் கிளந்தான் மாநில நிர்வாகம் 39% மலேசியர்கள் மனநிறைவு அடைவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. மத்திய அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை இழந்து விட்டதாக பெரும்பாலும் பதில் அளிக்கையில், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மீது அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள். மலேசியர்கள் சிலாங்கூர் மாநில நிர்வாகத்தின் அடைவுநிலையை எண்ணிக்கை பெருமிதம் கொள்கிறார்கள். இதுவே மலேசியர்கள் 49% ஆதரவை வழங்கிய உள்ளனர். இது சிலாங்கூருக்கு வெளியே நடத்தப்பட்ட ஆய்வு, அப்படி சிலாங்கூரில் நடத்தப்பட்டு இருந்தால் ஆதரவு மேலும் அதிகரிக்கலாம். இதன் மூலம் மலேசியர்கள் சிலாங்கூர் மாநிலம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்று கருதுகிறார்கள். ” என்று டாருல் ஏசான் கல்லூரியின் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

BANGUNAN SUK

 

 

 

 

 

இந்த ஆய்வின் அடிப்படையில், மலேசியர்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் மீது அதிக நம்பிக்கை வைத்து உள்ளனர். மேலும் கூறுகையில், மலேசியா வாக்காளர் பட்டியலில் உள்ள 12,082,403 பேரில் இருந்து 4,486 பேரிடம் மத்திய அரசாங்கத்தை பற்றி கேள்வி கேள்விகள் கேட்கப் பட்டதாகவும், அதில் 8% மட்டுமே மிகச்சிறந்த நிலையில் செயல்படுவதாகவும், 21% சிறப்பாக இருக்கிறது எனவும், 41% மனநிறைவாக இருப்பதாகவும், 21% மோசமான நிலையில் இருப்பதாகவும் மற்றும் 10% மலேசியர்கள் படுமோசமான நிலையில் புத்ரா ஜெயா நிர்வாகம் இருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மீது பொது மக்கள் 11% மிகச்சிறந்த நிலையில் இருப்பதாகவும், 38% சிறந்த முறையில் நிர்வகிக்கப்பதாகவும், 46% மனநிறைவாக இருப்பதாகவும், 6% மோசமாகவும் மற்றும் படுமோசமான நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறது தெரியவந்துள்ளது.

#கேஜிஎஸ்


Pengarang :