PENDIDIKANSELANGOR

500 யுனிசெல் மாணவர்கள் அனைத்துலக தொண்டுழியர்களாக விருப்பம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 3:

சிலாங்கூர் பல்கலைக் கழகத்தின் (யுனிசெல்) 500 மாணவர்கள் அனைத்துலக ரீதியில் தொண்டுழியர்களாக சேவையாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாக அதன் உதவி துணை வேந்தர் (மாணவர்கள் மேம்பாட்டு) பேராசிரியர் முனைவர் ஷாருடீன் படாரூடீன் கூறினார்.

ஆனாலும், ஏறக்குறைய 250 மாணவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு பின் தேர்ந்தெடுக்கப் பட்டனர் என்று தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்கள் யுனிசெல் தொண்டுழியர்கள் திட்டத்திலும் மற்றும் குலோபல் பீஸ் மிஷன் (ஜிபிஎம்) உடன் ஒருங்கிணைந்த திட்டங்களிலும் பங்கு கொள்ளலாம் என்றார்.

”  கோம்னெட் மற்றும் ஜிபிஎம் தரப்பினர் நேர்முகத் தேர்வை நடத்திய வேளையில் சுமார் 500 பெஸ்தாரி ஜெயா மற்றும் ஷா ஆலம் ஆகிய இரு இடங்களில் இருந்தும் பங்கு பெற்றனர். இது யுனிசெல் மாணவர்கள் இடையே தொண்டுழிய சிந்தனையை காட்டுகிறது,” என்று யுனிசெல் மற்றும் ஜிபிஎம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறினார்.


Pengarang :