SELANGOR

72 % மக்கள் ஆதரவு: சிலாங்கூர் அரசு மக்களுக்கான அரசு என்பதை மெய்பித்தது

ஷா ஆலம், ஆகஸ்ட் 18:
டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களுக்கான விவேகமான அரசாங்கம் என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துள்ளது. அன்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் அஃது உறுதி செய்யப்பட்டிருப்பது சிலாங்கூர் வாழ் மக்களுக்கு பெருமிதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் இது போன்ற ஓர் ஆய்வில் 67 விழுகாடு மக்கள் ஆதரவை பெற்றிருந்த சிலாங்கூர் மாநில அரசாங்கம் இம்முறை 72 விழுகாடு மக்கள் ஆதரவை பெற்று டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமைத்துவத்திற்கு மாபெரும் அங்கீகாரத்தை சிலாங்கூர் வாழ் மக்கள் வழங்கியுள்ளனர்.பல்வேறு தரப்பு மக்களிடையே அன்மையில் மெர்டேக்கா செண்டர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இஃது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வினை அஃது ஜனவரி 23ஆம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதி வரை மேற்கொண்டது.சுமார் 12,001 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 8640 பேர் மாநில அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில், சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களின் செயல்பாட்டிலும் நடவடிக்கையிலும் மக்களின் மனநிறைவும் ஆதரவும் கூட தொடர்ந்து அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஊராட்சி மன்றங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் 63 விழுகாடு ஆதரவு கிடைத்த வேளையில் இம்முறை அஃது 74 விழுகாடாக உயர்ந்துள்ளது.மாநில அரசாங்கத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு மாநில அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கையையும் அஃது அதிகரித்துள்ளது.

கல்வியாளர்கள்,வர்த்தகர்கள், உயர்க்கல்வி மாணவர்கள்,அரசு ஊழியர்கள்,தனியார் ஊழியர்கள் உட்பட சாமானிய மக்கள் ஆகியோர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மக்களின் ஆதரவு சுமார் 72 விழுகாடு எட்டியிருப்பது சிலாங்கூர் அரசாங்கம் மக்களுக்கான சிறந்த அரசாங்கம் என்பதை மெய்பித்துள்ளது.

சிறந்த நிர்வாகம்,மக்களுக்கான நன் திட்டங்கள் ஆகியவை தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ள நிலையில் சிலாங்கூர் அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டங்களும் இனம்,மதம் கடந்து சிலாங்கூர் வாழ் மக்கள் எனும் நிலையில் அனைத்து நிலை மக்களுக்கும் சரிநிகராய் கிடைத்து வருவது தொடர்ந்து மக்களின் பெரும் ஆதரவை மாநில அரசாங்கம் பெற்று வருவதற்கான சான்று எனலாம்.

மாநில அரசாங்கத்தின் வெளிபடையாக அணுகுமுறையும் செயல்பாடுகளும் கூட மக்கள் மத்தியில் நன் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் இன்றைய இளம் தலைமுறையில் அபிமான அரசாங்கமாய் சிலாங்கூர் அரசாங்கம் விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடுகளும் ஆக்கப்பூர்வ பணிகளும் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தை பொருளாதார நிலையில் சிறந்த இலக்கை நோக்கி கொண்டு செல்வது வர்த்த ரீதியிலான மக்களிடையே பெரும் நம்பிக்கையையும் பெற்றிருப்பதால் தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்ற அரசாங்கமாய் சிலாங்கூர் அரசாங்கம் விளங்குகிறது.

அதேவேளையில்,அரசு ஊழியர் நலனிலும் தனித்துவ கவனம் செலுத்தி வரும் சிலாங்கூர் அரசாங்கத்தின் மீது மத்திய அரசு ஊழியர்களின் கவனமும் திரும்பியுள்ள நிலையில் சாமானிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திலும் கவனம் செலுத்தி அவர்களின் பொருளாதார சுமையினை குறைக்க பெரும் பங்காற்றுவதால் சிலாங்கூர் அரசின் மீது ஒட்டுமொத்த சிலாங்கூர் வாழ் மக்களின் கவனமும் திரும்பியுள்ளதோடு அவர்களின் ஆதரவும் தொடர்ந்து சிலாங்கூர் அரசாங்கத்திற்கு அதிகரித்து வருகிறது.

மலேசியாவில் மத்திய அரசாங்கம் மற்றும் இதர மாநில அரசாங்கத்தை காட்டிலும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் ஆதரவு சிலாங்கூர் அரசாங்கம் மக்களுக்கான சிறந்த அடிப்படையினை கொண்டிருக்கும் நன் அரசாங்கம் என்பதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது.மக்களுக்கான நன் திட்டங்களை குறிப்பாக பிறக்கும் குழந்தை முதல் சிலாங்கூரில் வாழும் மூத்தகுடிகள் வரை அனைவரும் நன்மை பெறக்கூடிய திட்டங்களை வரையறுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கம் சிலாங்கூர் அரசாங்கம் என்பதில் ஆக்கப்பூர்வமாக பயணிக்கிறது எனலாம்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பல்வேறு நிலைகளில் பெற்று வரும் சூழலில் நாட்டை ஆளும் மத்திய தேசிய முன்னணி அரசாங்கம் தொடர்ந்து மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது என்பதற்கு இஃது பெரும் சான்று.மக்கள் சிலாங்கூர் மாநிலத்தில் “மாநில அரசாங்கத்தை” தேர்வு செய்வதில் விவேகமான முடிவினைதான் எடுத்துள்ளனர் என்பதை பெருமிதமாக உறுதிப்படுத்தலாம்.

சிலாங்கூரில் வாழும் அனைவருக்கும் சரிநிகரான திட்டங்களோடு ஒவ்வொரு இனத்தின் உரிமையும் காக்கப்பட்டு மதம் சார்ந்த சிந்தனைகளில் மதிப்பளித்து மாநில வளர்ச்சியோடு மக்களையும் சிறந்த மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் இட்டுச்செல்லும் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு சிலாங்கூர் வாழ் இந்தியர்களின் ஆதரவும் தொடர்ந்து உயிர்ப்பித்திருக்க வேண்டும் என்பதே “சிலாங்கூர் இன்று”வின் பெரும் கோரிக்கை.மாநில வளர்ச்சியோடு சிலாங்கூர் இந்திய சமுதாயமும் மேம்பாடு காண வேண்டும் விவேகமாய்.

ஆக்கம்

கு.குணசேகரன்


Pengarang :