ECONOMYSELANGOR

ஆகஸ்ட் 16 வரை, 30,813 ஹிஜ்ரா பங்களிப்பாளர்கள்

ஷா ஆலம், செப்டம்பர் 3:

சிலாங்கூர் ஹிஜ்ரா கடனுதவி திட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 16 வரை 30,813 வியாபாரிகள் கடனுதவி தொகையாக ரிம 231,343,500 பெற்று பயன் பெற்றனர்.

சிலாங்கூரில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் காப்பார், கிள்ளான், கோத்தா ராஜா, கோலா சிலாங்கூர், சபாக் பெர்னாம், ஷா ஆலம், சுங்கை பெசார் மற்றும் தஞ்சோங் காராங் போன்ற நாடாளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த முதல் பகுதியில் 13,591 வர்த்தகர்கள் ரிம 93,057,500 கடன் தொகையாக பெற்றுள்ளனர்.

இரண்டாவது பகுதியில் அம்பாங், உலு சிலாங்கூர், பண்டான், பூச்சோங், செப்பாங், செர்டாங் மற்றும் செலாயாங் போன்ற நாடாளுமன்ற தொகுதிகள் மொத்தம் 8,812 வர்த்தகர்கள் ஹிஜ்ரா கடனுதவியாக ரிம 71,242,500 பெற்றுள்ளனர்.

மூன்றாவது பகுதியில் மொத்தம் ஏழு நாடாளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருக்கும் எனவும் மொத்த 8,410 வர்த்தகர்கள் ரிம 63,371,500 கடன் தொகையாக பெற்றுள்ளனர்.

சிலாங்கூரில் மிக அதிகமான ஹிஜ்ரா கடன் பெற்றவர்கள் காப்பார் நாடாளுமன்ற தொகுதியில் இருக்கிறார்கள். மொத்தம் 1,956 வர்த்தகர்கள் ஹிஜ்ரா கடனுதவி பெற்றனர். இரண்டாவது செப்பாங் (1919) மற்றும் மூன்றாவது சபாக் பெர்னாம் (1,866) முறையே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிஜ்ரா சிலாங்கூர் சிறுதொழில் கடனுதவி திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு பல்கலைக் கழக மாணவர்கள் வர்த்தகத்தில் ஈடுபட வழி வகுக்கும். ஹிஜ்ரா சிறப்பு கடனுதவி திட்டம் சிலாங்கூர் பல்கலைக் கழக (யுனிசெல்) மாணவர்கள் வர்த்தகத்தில் ஈடுபட முதலீட்டு தொகையை வழங்கி ஊக்குவிப்பு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#கேஜிஎஸ்


Pengarang :