NATIONAL

இந்திய இளைஞர்கள்: சவால்களும் மற்றும் தீர்வுகளும்

கோலா லம்பூர், செப்டம்பர் 27:

ஒவ்வொரு வருடமும் 7000 கும் (ஏழாயிரம்) மேல் நமது இந்திய மாணவர்கள் முழு கல்வி முடிக்காமலேயே பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.
காரணங்கள் பல:
# பள்ளிக்கு மட்டம் போடுதல்- ponteng sekolah
# பகடி வதை+buli
# jenayah- கடுமையான குற்றம்
# குண்டர் கும்பல்
# போதைப்பொருள்
# தகாத உறவு- என பட்டியல் நீளும்………

மீண்டும் சொல்கிறேன்..

நூறு- இருநூறு அல்ல…
ஏழாயிரம் மாணவ செல்வங்கள்.

13-16 வயதுக்கு உட்பட்ட அவர்களின் நிலை என்ன???
வாழ்வாதாரம் என்னவாகும்??
அவர்கள் எங்கே போனார்கள்?
எங்கே போகிறார்கள்?
என்கே போகப் போகிறார்கள்???

ஒரு மில்லியன் டாலர் கேள்வி?

படித்த மாணவர்களுக்கு மட்டும்தான் இங்கே பாராட்டு,சலுகை எல்லாம்.

ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் படிப்பை பாதியிலே அரைக்குறையாக அல்லது விரட்டியட்க்கப்பட்ட அந்த மாணவனின் நிலை என்ன???

மக்கள் தொகையில் 8%
ஆனால், சிறைச்சாலை யிலே 60% மேல் நமது இனத்து இளைஞர்கள் தான் என்ற செய்தி நெஞ்சை பிளக்கிறது.

நமக்கென்ன- என்று நாம் விட்டு விடலாம்- ஆனால் நமது இனம் நம் கண் முன்னே அழிவதை பார்த்துக்கொண்டிருப்பது முறையா- ஈழத்தில் நடந்ததை பார்த்துக்கொண்டிருந்தைப்போல ?

நாளை , நமக்கென்ன என்று விட்டு விட்ட அந்த கும்பலை சேர்ந்த ஒருவந்தான் நம்மை நம் வீட்டு கதவை உடைப்பான், தாலி அறுப்பான்- நம் வீட்டுப்பிள்ளைகளை கடத்துவான்,

நமக்கென்ன என்று விட்டு விட்ட அந்த கும்பல்தான் கொள்ளை,கற்பழிப்பு, திருடு,போதைபொருள்,சதி நாச வேலைகளில் சேர்ந்து நம் கழுத்திலே கத்தி வைக்கப்போகிறார்கள்.

சத்தியமாக சொல்கிறேன்- இது நடக்கும்- இன்றே நாம் சிந்தித்து செயல்பட வில்லையென்றால்.

ஒவ்வொரு வருடமும் ஏழாயிரம் (dropouts-) மாணவர்கள் உருவானது ஏன்? யார் காரணம்? மாற்று வழி என்ன? அவர்களை எவ்வாறு கரை சேர்ப்பது? என்ன திட்டம்? இன்று, நம்மினத்தின் உண்மை நிலையை- உண்மையாக பேச…

ஒரு சந்திப்பு- கலந்துரையாடல்.
Session dialog ” Belia india- Cabaran Dan Harapan

நாள்: 01.10.2017 ஞாயிறு/ ahad
நேரம் : மாலை 530pm க்கு- 7.00 வரை pm
இடம் : தமிழ் அறவாரிய அலுவலகம் opposite INTAN- SP

பேச்சாளர்: திரு. s.பசுபதி ( வக்கீல்- மை ஸ்கீல் தலைவர்) திரு. அ.ராகவன்-
தலைவர்- தமிழ் அறவாரியம்

சேர்ந்தே தேர் இழுப்போம். நீங்கள் இந்நிகழ்வில் கலந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். உங்கள் வருகை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் நேரத்தில் ஒரு மணி நேரத்தை இந்நிகழ்ச்சிக்காக ஒதுக்குங்கள்.

# மக்கள் தொண்டன்


Pengarang :