ANTARABANGSA

உடுமலை நாராயணகவி அவர்களின் பிறந்த நாள்

1899 – 118 ஆண்டுகளுக்கு முன் – திங்கட்கிழமை (மறைவு: 1981)

தமிழகப் பாவலர், பாடலாசிரியர்.

நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் சீர்திருத்தக் கருத்துகளைத் திரைப் படங்களில் முதன்முதலில் புகுத்தியவர்.

கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன. ‘கலைமாமணி’ என்னும் பட்டம் பெற்றார்.

தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82வது வயதில், 23.5.1981 இல் மறைந்தார்.

இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் *உடுமலை நாராயணகவி* நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்து உள்ளது. இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளன.

தகவல்: தமிழ் முத்துக்கள் புலனம்


Pengarang :