SELANGOR

உயர்தர தொழில்நுட்ப பணியிடத்திற்கான வாய்ப்பு

ஷா ஆலம், செப்டம்பர் 20:

சிலாங்கூரில் முதலீடு செய்யும் முதலீட்டு நிறுவனங்கள் அதிகமான உயர்தர தொழில்நுட்ப பணியிட வேலை வாய்ப்பினை உருவாக்குமாறு மாநில அர்சு அவர்களுக்கு வலியுறுத்துவதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.
வெளியூர் மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாநில அரசாங்கம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்வர்த்தகம் (எஸ்.ஐ.தி.இ.சி) வாரியம் அமைத்தது முதல் நல்ல வரவேற்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைத்து வருவதாகவும் அவர் நினைவுக்கூர்ந்தார்.இந்நிலையில் நாம் உள்ளூர் முதலீட்டாளர்களை மட்டும் கவனம் செலுத்தாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.அதன் மூலம் சிலாங்கூர் வாழ் மக்களுக்கு நன் நிலையிலான உயர்தர தொழில்நுட்ப வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றார்.
இதன் மூலம் சிறந்த முதலீட்டை பெறுவதோடு மின்வர்த்தகத்தில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கமும் அஃது பயன்படும் என்றார்.ஆசியன் வர்த்தக விருதுவிழா 2017இல் அவர் இதனை வலியுறுத்தினார்.அதேவேளையில்,சிலாங்கூர் மாநில மின்வர்த்தகர்கள் சிலாங்கூர் மாநில சர்வதேச வர்த்தக உச்சமாநாட்டில் பங்கெடுத்தது தமக்கு மேலும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருப்பதாகவும் மந்திரி பெசார் கூறினார்.

இம்மாதிரியான வாய்ப்புகள் தொழில்முனைவர்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் பொருளாதார ரீதியில் அடுத்தக்கட்டத்தை எட்டுவதற்கும் பெரிதும் உதவும் என கூறிய மந்திரி பெசார் சிலாங்கூர் மாநிலத்தை உலக வர்த்தக மையமாக உருவாக்குவதே இலக்கு என்றும் குறிப்பிட்டார்.

நடைபெற்ற விருது நிகழ்வில் மந்திரி பெசார் பல்வேறு நிலைகளில் வர்த்தக ரீதியில் வெற்றி அடைந்தவர்களுக்கும் திறன்பட வர்த்தகத்தில் ஈடுப்பட்டுவருவோருக்கும் விருதுகளையும் எடுத்து வழங்கினார்.விருது பெற்றவர்களில் சிறுத்தொழில் மற்றும்நடுதர வர்த்தகர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#ரௌத்திரன்


Pengarang :