SELANGOR

கார்பனை 30 விழுகாடாய் குறைக்க எம்பிஏஜே இலக்கு

அம்பாங்,19செப்:வரும் 2030ஆண்டை முன்னோக்கி அம்பாங்  நகராண்மைக்கழகம் (எம்பிஏஜே) அதன் ஊராட்சி பகுதியில் கார்பன் பயன்பாட்டை 30 விழுகாடாய் குறைத்திட இலக்கு கொண்டுள்ளது.

அனைத்து நிலை மக்களையும் உள்ளடக்கிய அம்பாங் செயல்பாடு நடவடிக்கையின் அடிப்படையில் அந்த இலக்கை அடைய எம்பிஏஜே முனைப்பு காட்டி வருவதாக அதன் தலைவர் அப்துல் ஹமிட் ஹூசேன் தெரிவித்தார்.

எம்பிஏஜேவின் பசுமை திட்டத்தின் கீழ் இதனை மெய்பிக்க முடியும் எனும் நிலையில் அனைத்து தரப்பின் ஒத்துழைப்பு மற்றும் ஆக்கப்பூர்வத்தின் கீழ் இத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க இலக்கு கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த இலக்கை எட்டுவதற்கு அனைத்து தரப்பு மக்களும் தோல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் நமது தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு நாம் தொடர்ந்து கைகோர்க்க வேண்டும் என்றார்.

ஸ்மார்ட் சிலாங்கூர் செயல் வடிவத்தின் ஒரு பகுதியாகவே இத்திட்டத்தை எம்பிஏஜே முன்னெடுப்பதாகவும் கூறிய அவர் இஃது பசுமையான சூழலுக்கு ஆக்கப்பூர்வமானதாக விளங்கும் என்றும் குறிப்பிட்டார்.

 

ydp-mpaj-abd-hamid-hussainஇதற்கிடையில் எம்பிஏஜே அன்மையில் பிரிட்டனால் குறைவான கார்பன் நகரம் எனும் நிலையில் 3வது இடத்தில் தேர்வு செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து இத்திட்டம் அதன் இலக்கை எட்டுவதற்கு எம்பிஏஜே 15 மில்லியனை ஒதுக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :