NATIONALRENCANA PILIHAN

கைரி ஜமாலுதீன் இழப்பீடு தொகையாக ரிம 210,000 அன்வாரிடம் வழங்க வேண்டும்

ஷா ஆலம், செப்டம்பர் 29:

இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், அம்னோவின் இளைஞர் பகுதி தலைவரான கைரி ஜமாலுதீன் கெஅடிலான் கட்சியின் தலைமை ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது அவதூறாக பேசியது தொடர்பில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. நீதிபதி அஸிஸூல் அஸ்மி அட்னான், கைரி கூறியிருப்பதாவது அன்வார் இப்ராஹிமை மிக கேவலமாக பேசி இருக்கிறார் என்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான அவர் அன்வாருக்கு இழப்பீடு தொகையாக ரிம 150,000 வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

Anwar-Ibrahim-Khairy-Jamaluddin

 

 

 

 

மேலும் அஸிஸூல் கைரி செலவுத் தொகையாக ரிம 60,000 வழங்க வேண்டும் என்றும் உத்தரவை பிறப்பித்தார். அன்வார் கடந்த பிப்ரவரி 19, 2008-இல் கைரி உரையாற்றிய போது தன்னை மிகக் கேவலமாக பேசியதை மேற்கொண்டு ரிம 100 மில்லியன் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தது குறிப்பிடத்தக்கது. தன்னை ஓரினச் சேர்க்கையில்  ஈடுபட்டு வருபவர் என்று சித்தரித்து பேசியதாக குற்றம் சாட்டினார்.

#கேஜிஎஸ்


Pengarang :