PBTSELANGOR

சபாக்பெர்ணம் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட மன்றத் தலைவர்

ஷா ஆலாம்,19 செப் : முன்னாள் சிலாங்கூர் மாநில மலாய் பண்பாடு மற்றும் சிலாங்கூர் பாராம்பரிய வாரியத்தின் தலைமை செயல்முறை நிர்வாகி முகமாட் பைஷூல்  பிட்ரிஃக் முஸ்லில் புதிய சபாக்பெர்ணம் மாவட்ட மன்றத் தலைவராக நியமனம் பெற்றார்.

அவரது பதவி நியமனத்திற்காக உறுதி கடிதத்தை மாநில செயலாளர் டத்தோ முகமட் அமின் அமாட் ஹயா வழங்கினார்.

இதற்கு முன்னர் அப்பதவியை அஸ்லிண்டா அஸ்மான் வகித்திருந்த வேளையில் அவருக்கு பதிலாக முகமாட் பைஷூல்  பிட்ரிஃக் முஸ்லில் நியமனம் செய்யப்பட்டார்.

நியமனம் செய்யப்பட்ட புதிய மாவட்ட மன்றத் தலைவருக்கு மாநில செயலாளர் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.

சபாக் பெர்ணம் சிலாங்கூர் மாநிலங்களில் இருக்கும் 12 ஊராட்சி மன்றங்களில் ஒன்றாகவும் அஃது 1977இல் அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 


Pengarang :