RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் நான்காவது தொழில் புரட்சியை எதிர் கொள்ள தயாராக உள்ளது

ஷா ஆலம், செப்டம்பர் 11:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் உலக நாடுகளில் மத்தியில் ஏற்பட்டுள்ள நான்காவது தொழில் புரட்சியை எதிர் கொள்ள தயாராக உள்ளது. இந்த தொழில் புரட்சி, சிந்தனை ஆக்கம் மற்றும் வேலை திறன் போன்றவைகளில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார். இஃது சிறந்த நடவடிக்கைகள் கொண்டு செயல்படும் என்றும் எல்லா துறைகளிலும் மேம்பாடு ஏற்பட்டு எதிர் காலத்தில் மாநில பொருளாதாரதிற்கு சிறந்த அச்சாணியாக அமையும் என்றார்.

”   நான்காவது தொழில் புரட்சியை எதிர் கொள்ள சிலாங்கூர் தயாராக உள்ளது. இஃது சிலாங்கூரை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லும். நாங்கள் பல்வேறு விதமான ஏற்பாடுகள் செய்து விட்டோம். மாநில நிர்வாகத்தை மறுமலர்ச்சி செய்ய, செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இஃது சிலாங்கூரை ஆசியான் வட்டாரத்தில் விவேக மாநிலமாக உருமாற்றம் பெற வழி வகுக்கும்,” என்று செதியா சிட்டி பல்நோக்கு மையத்தில் நடைபெறும் சிலாங்கூர்-ஆசியான் வாணிப மாநாடு 2017-இன் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவில் பேசினார்.

ASEAN BUSINESS (6)

 

 

 

 

 

இதனிடையே பொருளாதார வல்லுனர்கள், மனிதர்களின் வேலைகளை இயந்திர மனிதர்கள் அல்லது ‘ரோபட்’ செய்யும் சூழ்நிலை உருவாகும். இஃது நேரத்தையும் செலவீனங்களையும் குறைக்க உதவும் என்று கூறுகின்றனர். இயந்திர மனிதர்களின் வருகையினால் மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகள் இழக்க நேரிடும்.

#கேஜிஎஸ்


Pengarang :