SELANGOR

சிலாங்கூர், வெள்ளை மாளிகையிடம் மண்டியிட தேவையில்லை

ஷா ஆலம், செப்டம்பர் 17:

சிலாங்கூர் மாநிலம் புதிய முதலீடுகளை பெற யாரிடமும் மண்டியிட தேவையில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். ஆனால் இதற்கு மாறாக மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் அமெரிக்க பயணத்தின் போது வெள்ளை மாளிகையிடம் மண்டியிட்டு வந்திருந்தார் என்று தெரிவித்தார்.

”    முதலீட்டாளர்கள் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை கண்டு தங்களின் முதலீடுகளை நிலைநிறுத்தியது மட்டுமில்லாமல் தொடர்ந்து மாநிலத்தில் தங்களின் முதலீடுகளை அதிகரித்து வருகிறார்கள். இந்த செயல்பாடுகள் மூலம் பொது மக்கள் சீர்தூக்கி பார்க்க முடிகிறது. ஏன் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் முதலீடு தொடர்பாக மண்டியிட வேண்டும்?” என்று முகமட் அஸ்மின் அலி நேற்று சுல்தான் அலாம் ஷா பொருட்காட்சி சாலையில் நடைபெற்ற ‘சிலாங்கூர் மந்திரி பெசாருடன் புதிய மலேசியா’ எனும் விவாத மேடையில் கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

ekonomi-selangor-new

 

 

 

#கேஜிஎஸ்


Pengarang :