NATIONAL

டான்ஸ்ரீ தாய்ப் மீண்டும் அம்னோவில் வருத்தம் அளிக்கிறது

கோலா லம்பூர், செப்டம்பர் 21:
நாட்டு மக்கள் தொடர்ந்து அம்னோவால் பல்வேறு இன்னல்களையும் பிரச்னைகளையும் எதிர்நோக்கி வரும் நினையில் அதனை உணர்ந்திருந்தும் முன்னாள் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மீண்டும் அம்னோவில் இணைந்திருப்பது வருத்தம் அளிப்பதாக டத்தோஸ்ரீ எட்மன் சந்தாரா குறிப்பிட்டார்.

அம்னோவின் செயல்பாடுகள் மீதும் அது நாட்டு மக்களுக்கு இழைக்கும் இன்னல்களை கண்டும் வேதனை அடைந்து அம்னோவிலிருந்து வெளியேறிய டான்ஸ்ரீ தாய்ப் மீண்டும் அம்னோவில் இணைந்தது வேடிக்கையாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக அம்னோவை கடுமையாக விமர்சித்து வந்த அவர் மீண்டும் அம்னோவில் இணைந்திருப்பது அவரது தனிப்பட்ட உரிமையாக இருந்தாலும் தேசிய முன்னணியை வீழ்த்தி புதியதொரு மலேசியாவை உருவாக்கும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்காமல் போனது பெரும் ஐயத்திற்குரியதே.
இருப்பினும் தனது அரசியல் பாதையை அவர்தான் முடிவெடுக்க முடியும்.அது அவரது தனித்துவ உரிமை.அதை நாம் விமர்சனம் செய்வதில் அர்த்தமில்லை.
ஆனால்,அவர் அம்னோவில் மீண்டும் இணைந்ததால் இந்தியர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் டத்தோ ஸ்ரீ எட்மன் சந்தாரா நினைவுறுத்தினார். கெஅடிலான் கட்சியின் மத்திய உச்ச மன்ற உறுப்பினரும் சிகாமாட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளருமான டத்தோ ஸ்ரீ  எட்மன் சந்தாரா மலேசிய திருநாட்டில் அடுத்த பொதுத் தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :