NATIONAL

தமிழ் நாளிதழ் மீது துணை அமைச்சர் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல்

கோலா லம்பூர், செப்டம்பர் 5:

தமிழ் மலர் நாளிதழின் செய்தியால் ஆத்திரமடைந்த துணையமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் அப்பத்திரிகையின் தலைமையகத்தை முற்றுகையிட்டனர். இரு தரப்பினருக்கும் நடந்த வாக்கு வாதத்தில் துணையமைச்சர் சரவணனின் ஆதரவாளர்கள் அத்து மீறி நடந்து கொண்டதாகவும்,
அலுவலகத்தில் இருந்த ஓம்ஸ் தியாகராஜனை தாக்கியதாகவும் தடுக்கச் சென்ற மேலாளர் சரஸ்வதி கந்தசாமியையும் தாக்கியதாகவும் பத்திரிக்கை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிலாங்கூர் மாநில ம.இ.கா கூட்டத்தில், மாநிலத்துக்குச் சொந்தமான ம.இ.கா கட்டிட வாடகைக் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியை செய்தியாகப் பிரசுரித்து வந்த தமிழ் மலரின் மேல் அதிருப்தி கொண்ட சரவணனும் அவரது ஆதரவாளர்களும் விளக்கம் கோரி தமிழ் மலர் தலைமையக்கத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு நடந்த வாக்கு
வாதத்தில் கைவைக்கும் அளவிற்கு சரவணனின் ஆதரவாளர்கள் ஓம்ஸ் தியாகராஜனையும், மேலாளர் சரஸ்வதி கந்தசாமியையும் காயம் ஏற்படும் அளவிற்குத் தாக்கியுள்ளனர்.

கலகத்தைத் தடுக்க டத்தோ சரவணன் முயன்றார். சில நிமிடங்கள் கழித்து சரவணன் ஆதரவாளர்களோடு அவ்விடத்தை விட்டு வெளியேறினார். இச்சம்பவம் குறித்து இருதரப்பும் போலீசில் புகார் செய்திருப்பதாக வட்டாரத்து தகவல் கூறுகின்றன ,
தமிழ் மலர் அலுவலகம் இரண்டாவது முறையாகத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. கடந்த 2014 வருடம் நாடறிந்த குருஜியைப் பற்றிய செய்தியை பிரசுரம் செய்தமைக்காக குருஜியின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் சிலர் அலுவலகத்தில் புகுந்து பொருட்களை உடைத்து நொறுக்கினர்.
உண்மையை எழுதுவதை முடக்க ஊடகங்களுக்கு எதிராக குண்டர்த்தனம் ஏவிவிடப்படுகிறது.. இந்தக் கலாச்சாரம் தமிழ்ப் பத்திரிகை மத்தியில் கடுமையாக வளர்ந்து வருகிறது. பல வருடங்களுக்கு முன், தமிழ் நேசன் முன்னாள் நிருபர்
கலாராமு அவருடைய அலுவலகத்தில் தாக்கப்பட்டார். செய்தியில் அதிருப்திக்கு கொண்டவர்கள் நீதிமன்றத்தில் சந்திக்கலாம். அதைவிடுத்து தங்களுடைய பலத்தை அடிதடியில் காட்டுவது நாகரிகம் கிடையாது என்று மக்கள் கொதிக்கின்றனர்.

#கேஜிஎஸ்


Pengarang :