NATIONAL

துன் மகாதீர்: நஜிப்-டிரம்ப் சந்திப்பு, அந்நிய தலையீட்டின் உச்சகட்டம்

ஷா ஆலம், செப்டம்பர் 6:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், பிரதமர் டத்தோ ஸ்ரீ முகமட் நஜிப் ரசாக் அமெரிக்கா நாட்டிற்கு செல்லும் பயணம், வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டின் விவகாரங்களில் தலையீடு செய்யும் சூழ்நிலையை உருவாக்கும் என்று கூறினார். செப்டம்பர் 12-இல் நஜிப், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்க ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டு வருகிறது.

துன் மகாதீர் மேற்கண்ட விவரங்களை ‘தெ மலேசியன் இன்சைட் ‘ இணையதள செய்தி நிறுவனத்துடன் நடந்த பேட்டியில் தெரிவித்தார்.

”  இப்போது நஜிப், டிரம்ப்பை திடீர் என சந்திக்கிறார். இது தன் மீது ஏற்பட்டுள்ள பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு வர முயற்சியாகும். இந்த நடவடிக்கை மலேசியா நாட்டின் மீது அந்நிய சக்திகள் தலையீட்டின் உச்சகட்டம்,” என்று கூறினார்.

Donald Trump

 

 

 

 

 

ஆனாலும் துன் மகாதீர், மலேசியா மக்கள் நஜிப்-டிரம்ப் சந்திப்பில் ஏமாற மாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தியில்  மூத்த பத்திரிகையாளர் ஜோஷ் ரோஜின் நஜிப் மற்றும் டிரம்ப் இருவரும் அமெரிக்க நீதித்துறையின் மிகப் பெரிய விசாரணையில் சிக்கி உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :