NATIONAL

துன் மகாதீர் மற்றும் நஜிப்பிற்கிடையிலான வெளியுறவு கொள்கையானது வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான வேறுப்பாட்டை கொண்டது

ஷா ஆலாம்,19செப்:நாட்டின் பிரதமராக துன் மகாதீர் இருந்த காலக்கட்டத்தில் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதிலும் நாட்டை சரியான அல்லது வெற்றிகரமான இலக்கில் அவர் கொண்டு சென்றார்.

அந்நிலையில்,மகாதீர் தனது காலக்கட்டத்தில் வெளியுறவு விவகாரத்திலும் கொள்கையிலும் தனித்துவமாய் விளங்கினார்.அவர் உலகளாவிய நிலையில் மனித்தத்துவ விவகாரங்களில் துணிந்தும் உறுதியாகவும் குரல் எழுப்பினார் என்றும் யுனிசெல் பல்கலைக்கழகத்தின் துண்வேந்தர் பேராசிரியர் டாக்டர் ஷாராரூடின் படாரூடின் குறிப்பிட்டார்.

துன் மகாதீர் மற்றும் நடப்பில் டத்தோஸ்ரீ நஜிப் ஆகிய இருவரின் தலைமைத்துவத்தையும் அவர்களின் காலக்கட்டத்தையும் கவனிக்கும் போது வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான வேறுப்பாட்டினை அஃது கொண்டிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காண்பித்தார்.

துன் மகாதீர் பல்வேறான விமர்சனங்களுக்கு ஆளானாலும் நாட்டின் வளர்ச்சியும் மேம்பாடும் சிறப்பாக இருந்தது.ஆனால்,நஜிப்யின் காலக்கட்டத்தில் நாட்டின் தனித்துவமும் அதன் இயல்பியலும் தொடர்ந்து நஜிப்யின் அரசியல் நிலைப்பாட்டிற்காக தொலைந்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.உலக பெரும் ஆளுமைகளை மகாதீர் துணிந்து குரல் எழுப்பிய வேளையில் நஜிப் அவர்களிடன் மண்டியிட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

துன் மகாதீர் காலக்கட்டத்தில் நாம் தொடர்ந்து அமெரிக்காவின் செயல்பாடுகளையும் அதன் ஏகாதிபத்தியத்தை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்துள்ளதோடு எதிர்த்தும் இருக்கிறோம்.ஆனால்,நஜிப்பின் போக்கு அவ்வாறு இல்லை.கண்டிக்கவும் கேள்வி எழுப்பவும் வேண்டிய விவகாரங்களில் கூட மௌனமாகவே நஜிப் இருப்பதாகவும் கூறினார்.

குறிப்பாக சீனா ஆக்கரமித்திருக்கும் தென் சீனக்கடல் விவகாரம்,காணமால் போன எம்எச் 370 விவகாரம் மற்றும் உக்ரினில் சுடப்பட்ட எம்எச்17 ஆகிய விவகாரங்களில் நஜிப்பிடம் ஆக்கப்பூர்வமில்லை என்றும் சாடினார்.

Prof_Dr_Shaharuddin_Badaruddin

 

 

 

 

 

மலேசியாவை   காட்டிலும் சீனா மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகள் எம்.எச்.370 விவகாரத்தில் காட்டிய தீவிரமானது மலேசியாவை காட்டிலும் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.நஜிப் நேர்மையான மற்றும் விவேகமான செயல்நிலையினை முன்னெடுக்காமல் தனது அரசியல் நிலையிலான வாய்ப்புகளுக்கு முதன்மை அளித்து வருவதாகவும் கூறினார்.

உதாரணத்திற்கு சீனா நம் நாட்டில் முதலீடு செய்ய முன் வரும் நிலையில் அந்நாடு குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் வாய் திறப்பதில்லை என்பதையும் அவர்  தெளிவுப்படுத்தினார்.

 


Pengarang :