NATIONAL

நஜிப் ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தை இந்தியாவுடன் ஒப்பிடுவது தவறு!!!

வல்லரசு நாடுகள் பட்டியலில் 6-ஆவது இடத்தில் இந்தியா. நாம் அந்த படியலில் நாம் நெருங்கி விட்டோமா என்ற கேள்வியும் உண்டு ஆனால் அது வெறும் கேள்வி குறியே.

நாம் வெளி நாட்டு சுற்றுப் பயணிகளை அதிகம் எதிர்பார்க்கிறோம். இந்தியா அப்படி எதிர்பார்க்கவில்லை. இங்கு நமது நாட்டில் விலை வாசிகள் நாள் தோறும் ஏறிக் கொண்டே போகின்றன. மீன்களின் விலைகள் கிடுகிடு என ஏறிக் கொண்டே போகின்றன.

ஒரு சராசரி தொழிலாளி பெறும் மாத வருமானம் குறைந்த வரம்பு ரிங்கிட் மலேசியா 1200.00 என நிர்ணிக்க பட்டு உள்ளது. மக்கள் குய்யோ முறையோ குச்சல் போடும் காரணம் பண கஷ்டம்தான்.

நம் நாட்டில் எல்லோரும் உழைத்து சாப்பிடும் நிலையில் உள்ளோம். மக்கள் உங்களைப் பிரதமாராக தேர்ந்து எடுத்தது அந்த நாட்டின் பெருமைகளை பேசுவதற்கு அல்ல. எங்கள் பிரதமர் எங்களுக்கு என்ன நன்மைகள் செய்கிறார் என்றுதான் பார்க்கிறோம் தவிர அந்த நாட்டின் இந்தியா ஜி.எஸ்.டி. 28 விழுக்காடு பற்றி அல்ல.

எங்களுக்கு 6 விழுக்காடு பெரும் சுமையாகத் தான் உள்ளது. ஐந்து இளம் பிள்ளைகள் வைத்து வளர்ப்பவன் ஒரு டெக்சி தொழிலாளி… நாள் ஒன்றுக்கு வேலை செய்யும் நேரம் 12.00 மணி நேரம். அப்படி அவன் செய்தல் தான் அன்றைய வருமானம் ரிங்கிட் மலேசியா 150.00.

அதில் செலவுகள் ஜி.எஸ்.டி. உட்பட போக வீட்டிற்குக் கொண்டு போகும் பணம் வெறும் 50.00. ரிங்கிட். போதுமா பிரதமர் அவர்களே. நீங்கள் நல்லவர்தான் இல்லை என்று சொல்லவில்லை.

எங்கள் இந்திய இனத்திற்கு அதிகம் கொடுத்த பிரதமரும் நீங்கள் தான். உங்கள் பேச்சுக்குக் கை தட்டும் ஒரு கும்பலை மட்டும் பார்க்காதீர்கள். எங்களைப் போன்ற மக்கள் உங்கள் பேச்சுக்கு கை தட்டு வாங்குவது உங்களுக்கும் எங்களுக்கும் பெருமை தானே.

(நன்றி: செம்பருத்தி)


Pengarang :