SELANGOR

புதிய ‘கொம்பெக்டெர்’ லாரி ஒரு நாளைக்கு 12 டன் குப்பைகளை எடுக்கும்

ஷா ஆலம், செப்டம்பர் 19:

கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய ‘கொம்பெக்டெர்’ லாரிகள் ஒரு நாளைக்கு 12 டன் குப்பைகளை எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என்று கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரம்லி தாஹீர் கூறினார். ஊராட்சி மன்றங்கள் நிர்வாகத்தில் உள்ள பகுதிகளில் உள்ள குப்பைகள், பூங்காவின் கழிவுகள் மற்றும் தொழில் பேட்டை குப்பைகளை அகற்றும் வல்லமை கொண்டதாக இந்த புதிய லாரிகள் இயங்கும் என்றார்.

”  இதற்கு முன்பு, குப்பை அகற்றும் லாரிகள் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு டன் குப்பைகளை எடுக்கும் திறன் கொண்டது. ஆக, நாங்கள் இந்த லாரிகள் மூலம் எதிர் வரும் காலங்களில் குப்பைகளை அகற்றும் சேவைகள் மேம்படுத்தப்படும் என்றார்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

990f420d-7641-4fe1-8f91-16c6d6363eed

 

 

 

 

 

 

இதனிடையே கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் 14 கொம்பேக்டெர் லாரிகளை செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) ஆகிய ஊராட்சி மன்றங்களுக்கு வழங்கியுள்ளது.

#கேஜிஎஸ்


Pengarang :