NATIONAL

பொதுத் தேர்தல் முடிவு மூன்று முன்னாள் மந்திரி பெசார்களின் கையில் இல்லை

ஷா ஆலம், செப்டம்பர் 26:

அம்னோ தேசிய முன்னணி மூன்று முன்னாள் மந்திரி பெசார்களை ஒன்றிணைத்து சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை பாக்காத்தானிடம் இருந்து கைப்பற்றும் முயற்சி கைகூடாது என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமைச் செயலாளர் டத்தோ சைபூடின் அப்துல்லா கூறினார். மாறாக 14-வது பொதுத் தேர்தலின் முடிவை நாட்டு மக்களே நிர்ணயம் செய்வர் என்றார்.

”    நாம் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. அந்த மூன்று முன்னாள் மந்திரி பெசார்களும் மக்களுக்கு சேவையாற்றி உள்ளனர். ஆனாலும் தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஆற்றல் யாரிடமும் இல்லை. சிலாங்கூர் மாநில ஆட்சியை முடிவு செய்யும் தலையாய கடமை மாநில வாக்காளர்களிடம் மட்டுமே இருக்கிறது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

சைபூடின், சிலாங்கூர் அம்னோ-தேசிய முன்னணியின் தலைவர் டான்ஸ்ரீ நோ ஒமார் மூன்று முன்னாள் மந்திரி பெசார்களான டான்ஸ்ரீ முகமட் முகமட் தாயிப், டான்ஸ்ரீ அபு ஹாசன் ஒமார் மற்றும் டாக்டர் முகமட் கிர் தோயோ ஆகியோரை ஒன்றிணைத்து சிலாங்கூரை கைப்பற்றும் முயற்சியை மேற்கோள்காட்டி இப்படி கூறினார்.

dato saifuddin abdullah -markshort 2

 


Pengarang :