PBTSELANGOR

மாநில அரசாங்கம் கொள்கைகளை மறுஆய்வு செய்ய தயாராக உள்ளது

ஷா ஆலம், செப்டம்பர் 29:

உணவு மற்றும் பானங்கள் பெருவிழாவின் அனுமதி குறிப்பாக மதுபானம் அருந்தும் நிகழ்ச்சிகள் ஊராட்சி மன்றங்களின் விதிமுறைகளை பின்பற்றி நடக்க ஒத்துக் கொண்ட பிறகே அனுமதி வழங்கப்படும் என்று மூத்த ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் தெரிவித்தார். உள்ளாட்சி சட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றங்கள் செயல்படுகிறது என்றும் மாநில அரசாங்கம் முடிவு செய்யவில்லை என்று கூறினார். ஆனாலும் மாநில அரசாங்கம் நடைமுறையில் உள்ள ஊராட்சி மன்றத்தின்  சட்டங்களை அல்லது கொள்கைகளை மறுஆய்வு செய்ய தயாராக இருக்கிறது.

”   நாம் நிறைய எதிர்ப்புகளை சந்தித்து கொண்டு இருக்கிறோம். அப்படி தேவைப்பட்டால், நமது கொள்கைகளை மாற்றங்கள் செய்யலாம். தற்போதைய சூழ்நிலையில் அந்த நிலைமை ஏற்படவில்லை. இந்த பெருவிழா ஏற்கனவே நடந்து வருகிறது. இதற்கு முன் அனுமதி அளித்து உள்ளனர்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

தேங் சாங் கிம் மேலும் கூறுகையில், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் நிர்வாகத்தில் சிலாங்கூரில் வாழும்  எல்லா இனங்களின் உணர்வுகளையும் மதிக்கும் கொள்கையை அமல்படுத்தி வருகிறது என்று விவரித்தார்.

TENG (3)

 

 

 

 

 

 

 

 

 

”   நாம் ஜனநாயக முறையில் நடந்து கொள்ள வேண்டும். அனைவரின் கருத்துக்களையும் கேட்கப் பிறகு நாம் நடைமுறையில் உள்ள சட்டங்களை பின்பற்றி நடக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், சில ஊராட்சி மன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும் சில ஊராட்சி மன்றங்கள் ஏற்பாட்டாளர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :