SELANGORSUKANKINI

மாநில அரசாங்கம் மற்றும் சிலாங்கூர் எம்எஸ்என் கூட்டாக விளையாட்டாளர்களை அடையாளம் காணும்

கிள்ளான், செப்டம்பர் 11:

மாநில அரசாங்கம் தொடர்ந்து அடிமட்டத்தில் இருந்து விளையாட்டாளர்களை அடையாளம் கண்டு தேசிய மற்றும் அனைத்துலக ரீதியில் கொண்டு செல்ல உத்தேசித்துள்ளது என்று சிலாங்கூர் மாநில இளையோர், விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறினார். மாநில அரசாங்கம், சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் (எம்எஸ்என்) மூலம் திறன் கொண்ட விளையாட்டாளர்களை கொண்டு எதிர் காலத்தில் மாநிலத்தை மற்றும் நாட்டை பிரதிநிதித்து செல்லும் வகையில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் படும் என்றார்.

”    நாம் இது வரை அமல்படுத்திய திட்டங்கள் வெற்றி அளித்து இருக்கும் நிலையில், மேலும் அடையாளம் காணப்பட்ட விளையாட்டாளர்களை சிறந்த பயிற்சி அளித்து தேசிய ரீதியிலும் அனைத்துலக ரீதியில் போட்டியிடும் திறனை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். நாம் அடிப்படை விளையாட்டு திட்டங்களை செயல்படுத்தி புதிய விளையாட்டாளர்களை உருவாக்கி, எதிர் காலத்தில் வெற்றியாளர்களாக நாட்டிற்கு நற்பெயரை பெற்று தருவார்கள்,” என்று 2017-இன் சீ விளையாட்டு போட்டியில் வென்ற சிலாங்கூர் விளையாட்டாளர்களுக்கு சிறப்பு வெகுமதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்

 

AMIRUDIN SHARI

 

 

 

 

 

 

 

மேன்மை தங்கிய சிலாங்கூர் அரசர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா விளையாட்டாளர்களுக்கும் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் மொத்தம் ரிம 540,000 வெகுமதியாக வழங்கினார்.

தங்கம் வென்றவர்கள் ரிம 5,000, வெள்ளிக்கு ரிம 3,000 மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரிம 2,000 வழங்கப்பட்டது. நடந்து முடிந்த 2017-இன் சீ விளையாட்டு போட்டியில், சிலாங்கூரின் விளையாட்டாளர்கள் மொத்தம் 41 தங்கம், 28 வெள்ளி மற்றும் 28 வெண்கலப் பதக்கங்களை நாட்டிற்கு பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :