SELANGOR

மாநில சுற்றுலாத்துறை மேம்பாடு அடைந்து வருகிறது

ஷா ஆலம், செப்டம்பர் 20:

புதிய அணுகுமுறையும் செயல் திட்டங்களும் தொடர்ந்து சிலாங்கூர் மாநில சுற்றுலாத்துறையினை மேம்பாட்டை நோக்கி கொண்டு செல்வதாகவும் அஃது ஆரோக்கியமான நிலையில் பயணிப்பதாகவும் அதன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசெபெட் வோங் தெரிவித்தார்.

மாநில சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை கவர்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் செயல்முறைகளையும் மாநில சுற்றுலாத்துறை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.அது குறித்த விளம்பரங்களும் அறிமுகங்களும் கூட விவேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சிலாங்க்கூர் மாநிலத்தை உலக அளவில் அறிமுகம் செய்யவும் அதன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை கவரவும் சிலாங்கூர் மாநில சுற்றுலாத்துறை இம்மாதம் அதன் இலக்கை ஜப்பான் நோக்கி பயணித்ததாகவும் இதில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியும் கலந்துக் கொண்ட வேளையில் அஃது ஆக்கப்பூர்வமான பங்களிப்பினை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதன் மூலம் வருங்காலங்களில் சிலாங்கூர் மாநிலத்திற்கு ஜப்பான் நாட்டின் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை பன்மடங்கு அதிகரிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்த ஆட்சிக்குழு உறுப்பினர் புதிய சுற்றுலா தலங்களையும் மாநில சுற்றுலாத்துறை அறிமுகம் செய்திருப்பதாகவும் கூறினார்.தஞ்சோங் சிப்பாட் படகுதுறை மற்றும் காஜாங் வட்டாரத்தில் பல்வேறு ஈர்ப்பான இடங்களும் அதில் அடங்கும் என்றார்.
அதேவேளையில்,மாநில அரசு காஜாங் வட்டாரத்தில் சுற்றுலாதுறை சார்ந்த வரலாற்று இடங்கள் மற்றும் பாரம்பரிய தலங்கள் ஆகியவற்றை சுற்றுலா நோக்கத்திற்காக பயன்படுத்தும் இலக்கை அடுத்தாண்டு கொண்டிருப்பதாகவும் அதற்காக அது சார்ந்த இயக்கங்கள் மற்றும் இலாகாவுடம் ஒத்துழைக்க மாநில அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

காஜாங் வட்டாரத்தில் பல்வேறு ஈர்ப்பான இடங்கள் இருப்பதாகவும் அதனை எளிதில் இரசித்து உணர எம்ஆர்டி போக்குவரத்து ஆக்கப்பூர்வமாக அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில்,சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிகமான சுற்றுப்பயணிகளை கவர மாநில ரீதியிலான உணவு திருவிழாவையும் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் அஃது அதிகமான சுற்றுப்பயணிகளை கவர வழிகோலும் என்றும் எலிசெபெட் நம்பிக்கை தெரிவித்தார்.

#ரௌத்திரன்


Pengarang :