SELANGOR

மூத்த குடிமக்கள் எஸ்எம்யுஇ திட்டத்தில் பதிந்து கொள்ள வேண்டும்

ஷா ஆலம், செப்டம்பர் 8:

சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் மூத்த குடிமக்கள் நல திட்டத்தில் (எஸ்எம்யுஇ) பதிந்து கொண்டு மரண சகாய நிதியான ரிம 2500-ஐ தங்களின் வாரிசுதாரர்களுக்கு கிடைக்க மாநில அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கிறது கோலா குபு பாரு சட்ட மன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார். இத்திட்டத்தில் தகுதி பெற்றவர்கள் பதியவில்லை எனில் இறப்பு ஏற்படும் பொது ரிம 1000 பெறுவதற்கு சிரமம் ஏற்படும்.

”   பதிவு செய்த மூத்த குடிமக்கள் இறந்து விட்டால் சட்ட மன்ற அலுவலகத்தில் வாரிசுதாரர் ரிம 2500-ஐ இரண்டு கட்டமாக பெற்று கொள்ளலாம். முதல் கட்டமாக ரிம 1000 மற்றும் இரண்டாம் கட்டத்தில் ரிம 1500 வழங்கப்படும்,” என்று சீனார் ஹாரியான் நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2008-இல் அறிமுகம் செய்த பரிவு மிக்க மக்கள் நல திட்டத்தில் ஒன்றான இத்திட்டம் 2017 மார்ச் 31 வரை ரிம 201 மில்லியன் மரண சகாய நிதியான வாரிசுதாரர்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :