ECONOMYRENCANA PILIHANSELANGOR

வட்டார முதலீடு வாய்ப்புகளை கவர முதன்மையான இலக்கை சிலாங்கூர் கொண்டிருக்கிறது

ஷா ஆலம், செப்டம்பர் 11:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் சிறந்த வாணிப கொள்கைகளை பின்பற்றி மாநில முதலீடு நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இந்த உத்தரவாதம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலாங்கூரில் முதலீடு செய்ய தூண்டுகிறது என்றார்.

”   சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை பிரதிநிதித்து நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். மாநில அரசாங்கத்தின் நிர்வாகம் முதலீட்டாளர்களுடன் நட்பு பாராட்டும் வகையிலும், பொறுப்புடனும், வெளிப்படையாகவும் மற்றும் நேர்மையான நிர்வாகத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படும் என்று உறுதி கூறுகிறேன். சிலாங்கூர் பல்வேறு இனம், மதம் மற்றும் மொழிகளைக் கொண்ட மாநிலம். அஃது மாநிலத்தின் பலத்தை மேலும் அதிகரித்து அதன் மேம்பாட்டுக்கு வித்திட்டுள்ளது. பல்லின மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை மற்றும் திறன் மிக்க மாநில நிர்வாகம், அரசாங்கத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கிறது. இஃது மாநிலத்தின் மிதவாத போக்கு மற்றும் வெளிப்படையான வழி நடத்தும் மாநில அரசாங்கத்தை பிரதிபலிக்கும்,” என்று சிலாங்கூர்-ஆசியான் வாணிப மாநாடு 2017-இன் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

AZMIN (1)

 

 

 

 

 

 

 

 

 

 

அஸ்மின் அலியோடு, மாநில முதலீடு, தொழிற்துறை, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம், இன்வெஸ்ட் சிலாங்கூரின் தலைமை இயக்குநர் டத்தோ ஹாசன் அஸாரி இட்ரிஸ் மற்றும்  ஆசியான் வணிக ஆலோசனை மன்றத்தின் மலேசியாவிற்கான தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் முனீர் மஜீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, செதியா சிட்டி பல்நோக்கு மையத்தில் சிலாங்கூர் அனைத்துலக வாணிப உச்ச மாநாடு 2017-ஐ சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும் இன்வெஸ்ட் சிலாங்கூர் இணைந்து நடத்தி முதலீடு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :