RENCANA PILIHANSELANGOR

ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவைக்கு ரிம 42 மில்லியனுக்கு மேல் செலவிட்டுள்ளது

ஷா ஆலம், செப்டம்பர் 25:

சிலாங்கூர் மாநில அரசாங்கமும் ஊராட்சி மன்றங்களும் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவை திட்டத்திற்கு ரிம 42.5 மில்லியனை இது வரை செலவிட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில முதலீடு, தொழிற்துறை, வாணிபம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். மாநில அரசாங்கம் ரிம 33.5 மில்லியனும் ஊராட்சி மன்றங்கள் ரிம 9 மில்லியனும் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷா ஆலம் மாநகராட்சி மன்றம், கிள்ளான் நகராண்மை கழகம், சுபாங் ஜெயா நகராண்மை கழகம், அம்பாங் ஜெயா நகராண்மை கழகம், காஜாங் நகராண்மை கழகம், செலாயாங் நகராண்மை கழகம் போன்றவைகள் அடங்கும் என்றார்.

 

IMG_3365

 

 

 

 

 

ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையின் 100-வது பேருந்தை சன்வே பிரமிட் முன்பு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தொடக்க விழாவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் சட்ட மன்ற சபாநாயகர் மற்றும் சுபாங் ஜெயா சட்ட மன்ற உறுப்பினர் ஹான்னா இயோவும் கலந்து கொண்டனர்.

#கேஜிஎஸ்


Pengarang :