SELANGOR

அஸ்மின் அலி: மனிதப்  பண்பினை  கொண்ட ஒரு தேசத்தை உருவாக்குவோம்

ஷா ஆலம், அக்டோபர் 14:

பல்லின மக்கள், பன்முகச் சமய நம்பிக்கை கொண்ட மலேசிய நாட்டில் வாழும் மக்களிடையே  ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் பிரச்சினை தொடர்பாக மலாய் ஆட்சியாளர்களின்  உறுதியான நிலைப்பாட்டை பலமாக ஆதரிப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகம்மது அஸ்மின் அலி தெரிவித்தார்.

கூட்டாட்சி அரசியலமைப்புச் சட்டத்தில்  உள்ள தூய கொள்கைகளை மதிக்க வேண்டிய அவசியத்தையும், அதன் சாரத்தின்  புரிந்துணரும்  தேவையையும்
ஆட்சியாளர்கள் முன்வைத்திருப்பதை வெகுவாக வரவேற்பதாக அஸ்மின் கூறினார். மலாய் ஆட்சியாளர்களின் நிலைப்பாடு என்பது சுடர்விடும் ஒளிக்கு ஒப்பானது. பல்லின மக்கள் வாழும் நாட்டில், நாட்டின் நிலைத்தனமைக்குக் குந்தகம்
விளைவிக்கும் செயல்கள் குறித்து பதில் செய்வது என்பது சுடர்விடும்
விளக்கைப்போல, தற்கால சவால்களை எதிர்நோக்க மக்களைத் தயார்படுத்துவதாகும்.

சகிப்புத்தன்மை மற்றும் மிதமான போக்கு, விட்டுக்கொடுத்தல் என்னும்
இஸ்லாமியம் தன்மையினைக் குறித்த ஆட்சியாளர்களின் வழிக்காட்டுத்தலை
இஸ்லாமியர்களின் மலேசியர்களும் கடைபிடிக்க வேண்டும் என்று அஸ்மின் தெரிவித்தார்.

மலாய் ஆட்சியாளர்களின் வழிகாட்டுதல்கள் அரசியலமைப்பு முடியாட்சி நிறுவனத்தின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றன. மேலும்   மக்களுடைய மனசாட்சியாகவும்  மற்றும் அபிலாஷைகளாகவும் இருப்பதில் மலாய் ஆட்சியாளர்கள் குறிப்பிடத்தக்கப் பங்களிக்கிறார்கள், மலாய் ஆட்சியாளர்கள் இந்தக் குரலானது சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தூணாக இருப்பது தொடரும் என்றார் அஸ்மின்.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், அணைத்து மலேசிய மக்களும், குறிப்பாக சிலாங்கூர் மக்கள், அரசியல், கலாச்சாரம் மற்றும் இனவாத குண்டர்கள்
சித்தாந்தங்களை  நிராகரிக்க  அனைத்து மலேசியர்களையும்  அழைப்பதாகக் கூறினார்.

உலகளாவிய நிலையில்  மனிதப்  பண்பினை  கொண்ட ஒரு தேசத்தை நாம் ஒன்றாக இணைப்போம். கௌரவமான, மரியாதைக்குரிய, நம்பகமான தேசத்தை உருவாக்குவோம் என்று அனைவருக்கும் அழைப்பை விடுத்தார் அஸ்மின்.


Pengarang :