ANTARABANGSA

ஆங் சான் சூகியிடமிருந்து ஆக்ஸ்போர்டின் சுதந்திர விருது பறிக்கப்பட்டது.

பிரிட்டன், அக் 5:

மியான்மரின் தேசிய ஆலோசகரான ஆங் சான் சூ கியி டமிருந்து  ‘ஆக்ஸ்போர்டின் சுதந்திரம்’ (Freedom of Oxford) என்ற மரியாதைக்குரிய பெயர் அழைப்பை அவரிடமிருந்து திரும்பப்பெறப்பட்டதாக ஆக்ஸ்போர்டு சிட்டி மேயர் பாப்
ப்ரிஸில் டெலிகிராப் மூலம்அறிவித்தார். மியான்மார்  ரோஹினியாவின் அடக்குமுறை விவகாரத்தில் சூகியின் ஈடுபாடு போதுமானதாக இல்லை” என்று டெலிகிராப் தெரிவித்துள்ளது.

1997 ஆம் ஆண்டில் அவர் மியான்மரின் அரசியல் கைதியாக இருந்த போது அவரின் சுதந்திர போராட்டத்தை கௌரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது.
கடந்த 1999 -ஆம்  ஆண்டுமுதல்  செயின்ட் ஹக் பல்கலைக்கழக கல்லூரி நுழை வாசலில் அருகில்  மாட்டிவைக்கப்பட்டிருந்த சூகியின் உருவப்படமும் அகற்றப்பட்டுள்ளது.
அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான சூகியின்உ ருவப்படத்துக்குச் சொந்தக்காரரான மைக்கேல் ஆரிசும் அங்கு படித்தவர்தான் என்று தகவல்
கூறுகிறது. சூ க்யின் உருவப்படம் கழற்றப்பட்டதற்கான காரணத்தை அப்பல்கலைக்கழகம்
இதுவரையிலும் கொடுக்கவில்லை.

#சரவணன்

Pengarang :