SELANGOR

உரப்பாசன தொழில்நுட்பம்: விவசாய தொழில் முனைவர்களுக்கு உதவுகிறது

ஷா ஆலம்,அக்டோபர் 6;

கைவிடப்பட்ட நிலத்திற்கு உரப்பாசன தொழில்நுட்பம் வழி விவசாய தொழில் முனைவர்களுக்கு உதவிகளை விரிவுபடுத்தும் திட்டத்தை மாநில அரசாங்கம்
மேற்கொண்டுள்ளது.

வளம் குன்றிய, விடுபட்ட நிலங்களை மீண்டும் செழிப்புறச் செய்ய இவ்வகைத் தொழிற்நுட்பம் மும்முரம் காட்டும் விவசாயிகளுக்காக  முன்னெடுக்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகம்மது அஸ்மின் அலி தெரிவித்தார்.
ஊக்கமளிக்க்கும்  இம்முயற்சிக்குக்  வருவாயை அதிகரிக்க கூடுதல் நிதி
தேவைபடும்  என்று அஸ்மின் கூறினார்.

உரப்பாசன தொழில்நுட்பத்தில் ஈடுபாடு காட்டும் சபைக்கு பெர்ணாம் பகுதி இளைஞர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டிருக்கும் அஸ்மின், இது தொடர்பாக, மாநில கருவூல மற்றும் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவுடன் 2018 வரவு செலவுத் திட்டத்தை வரைவதில் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டுள்ளதாக அஸ்மின் தெரிவித்தார்.

முன்னதாக,  அஸ்மின் அலி,   சிலாங்கூர் விவசாய இலாகாவைச் சேர்ந்த,உரப்பாசன தொழில்நுட்பத் திட்டத்தில் கலந்து கொண்ட ஐவருக்கு இன்று,  மொத்தத் தொகையாக  RM155,000  வெள்ளி வரை எட்டும்  மாதிரி காசோலையை  வழங்கும்
நிகழ்ச்சியைப் பூர்த்தி செய்தார்.

பின்னர் மலேசிய ஆயுதப்  படையைச் சேர்ந்த குறைவீனம் உடைய  முன்னாள் படைவீரர்களான  பாத் மாத் மற்றும் அபு பக்கர் அப்துல் ஆகியோருடன்  நேரத்தை ஒதுக்கி, அவர்களுடன் அளவளாவியப் பிறகு அவர்களுக்கு  நன்கொடை வழங்கினார். கடந்த இரண்டுகளாக முன்னாள் படைவீரர்களுக்கு மரியாதை செலுத்திவருவது
மாநில அரசாங்கம் கடைபிடித்துவரும் பாரம்பரியமாகும். பெரும்பாலான படை வீரர்கள்,பதவி ஓய்வுக்குப் பின் சிலாங்கூர் மாநிலத்தில் தங்கிவிடும்
முடிவை எடுத்து வருகியொன்றனர். அவர்களுக்காக இந்த முயற்சி விரிவாக்கப் படுகிறது என்றார் அஸ்மின். மேலும் அவர் கூறுகையில் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக போராடும் போலீஸ்காரர்கள் மற்றும்ராணுவ
வீரர்களின்  நலனைப் பாதுகாப்பதில் அரசாங்கம் எவ்வகையில் உதவலாம் என்பதை கவனித்து வருகிறோம் என்றார் அஸ்மின்.

#சரவணன்


Pengarang :